உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவிகிறது, உடற்பயிற்சி. ஆனால் அனுமதினமும் உடற்பயிற்சி செய்துவது போரடிக்கிறதா? சில நாட்கள் இவற்றைத் தவிர்க்கலாம் போல இருக்கிறதா?
அப்படியானால் உடற்பயிற்சி செய்யாமலேயே ஆரோக்கியமாக இருக்க முடியுமா என நினைக்கிறீர்களா? இதற்கு சில எளிய முறைகளை பின்பற்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
நடைபயிற்சி (Walking)
உடல் சுறுசுறுப்பாக இல்லாவிட்டால் பல வகையான நோய்கள் வந்துவிடும். அதனால் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் நேரம் கிடைக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வது கட்டாயம்.
ஏனெனில் நடைபயிற்சியே சிறந்த உடற்பயிற்சி. ஒரு நாளைக்கு 5,000-10,000 எட்டுகளை எடுத்து வைத்தால் போதும். ஜாகிங் செய்ய முடியாவிட்டால், வேகமாக நடக்கவும். இதன் மூலம் 30 நிமிடங்களில் 200 கலோரிகள் வரை குறைக்கலாம்.
ஒரே இடத்தில் (In one place)
நீங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தால், தண்ணீர் பாட்டிலில் நிறைத்து வைத்துக்கொள்வதைவிட, அவ்வப்போது எழுந்து சென்று நீர் அருந்தி வரவும். இது கலோரிகளை எரிக்க உதவும். நாள் முழுவதும் நாற்காலியில் உட்கார வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறிது நடக்கவும்.
கைகால்களை நீட்டவும் (Extend the limbs)
கைகளையும் கால்களையும் அவ்வப்போது நீட்டிக்கொண்டே இருங்கள். இது நரம்புகளின் இயக்கத்தைத் திறக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உங்கள் இடத்தில் இருந்து எழுந்து, நீட்டவும், பிறகு வேலைக்குத் திரும்பவும்.
வீடு சுத்தம் (House cleaning)
வீட்டு வேலைகளை நீங்களே செய்யுங்கள். வீட்டைச் சுத்தம் செய்வது, துடப்பத்தின் உதவியுடன் பெருக்குவது, துடைப்பது, தூசு தட்டுவது எனத் துப்புரவு வேலைகளை குனிந்து நிமிர்ந்து செய்வதால் வயிற்றுத் தசைகளுக்குப் பயிற்சி கிடைக்கும்.
செல்லப்பிராணிகள் (Pets)
உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால், அவைகளுடன் நேரத்தை செலவிடலாம். அவற்றை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
மேலும் படிக்க..
வெங்காயத்தை பாதத்தில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?