சமையல் அறையில் நீங்கா இடம் பிடித்திருக்கும் கடுகு, பார்க்க சிறிதாக இருந்தாலும் அதன் பலன் என்னவோ மிகப் பெரியது. கடுகில்லாமல் நமது சாம்பார், ரசம், களி என பல்வேறு உணவு வகைகள் முழுமையான சுவையை பெறாது. பெரும்பாலான உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது கடுகு.
கடுகு விதைகளின் நன்மைகள்
கடுகு விதைகளில் அதிகபடியான வைட்டமின்கள் ( vitamins) மற்றும் மினரல்கள் ( Minerals), நார்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. கடுகு விதைகளளை நாம் அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள உதவுகிறது.
கடுகு வகைகள்
கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகைகள் உண்டு.
வெண்கடுகு - பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வெண்கடுகு. கடுகு வகையை சேர்ந்த இது நாட்டு மருந்து கடைகளில் பெரும்பாலும் கிடைக்கும்.
கருங்கடுகு - இது நம் சமையல் செய்ய பயன்படுத்துவது. இதிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
நாய் கடுகு - இந்த கடுகுச்செடியின், பூக்கள், விதைகள், மற்றும் இலைகள் அனைத்துமே, மருத்துவ குணம் கொண்டது. இதனை நாய்வேளை, மற்றும்காட்டுகடுகு என்றும் அழைப்பர்.
புற்றுநோயைத் தடுக்கும் கடுகு!
கடுகு விதைகளில் குளுக்கோசினோலேட்ட (glucosinolate)மற்றும் மைரோசினேஸ் (myrosinase) கலவைகள் நிறைந்துள்ளது. இவை நம் உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமான செல்களின் வளாச்சியைத் தடுக்கிறது. விஞ்ஞானிகளின் அய்வின் படி, இந்த விதைகள் கீமோ-தடுப்பு (chemo-preventive)பண்புகளையும் கொண்டிருக்கின்றன, இவை புற்றுநோய்களை ஏற்படுத்தும் காரணிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கின்றது
ஒற்றைத் தலைவலி நீக்கும் அருமருந்து - கடுகு!
தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியால் நீங்கள் அவதிப்படும் போது கடுகின் நெடி திறம்பட செயல்படுகிறது. கடுகு விதைகளில் மெக்னீசியம் (magnesium)அதிகமாக உள்ளன, இவை உங்கள் நரம்புகளைத் தணிக்க உதவுகிறது. மேலும் உடலின் பல்வேறு பகுதிகளில் வலிகள் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு நிவாரணம் தருகிறது. கடுகை அரைத்து தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போட்டால் வலி நீங்கும். இதேலோப், முட்டிவலி மற்றும் ரத்தக்கட்டியின் மீதும் பயன்படுத்தலாம்.
செரிமான பிரச்சனைக்கு சிறந்தது
சீரற்ற உணவுப் பழக்கம் காரணமாக அஜீரணம், செரிமானப் பிரச்சைகள் ஏற்படலாம். அதிலிருந்து விடுபட கடுகு உதவி செய்கிறது. இந்த சிறிய கடுகு விதைகளில் ஏராளமான நார்ச்சத்து அடங்கியுள்ளன. இது கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறன. மேலும் உடலின் செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இருதயத்திற்கு இதம் தரும் கடுகு!
இருதய பிரச்சினைகள் இருப்பவர்கள் கடுகு விதைகளை அவர்களின் உணவுகளில் எடுத்துக் கொள்வது அவசியம். இவை உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு ரத்தத்தில் கெட்ட கொழுப்பையயும் குறைக்கிறது. கடுகு விதைகளை மட்டும் சமையலுக்கு பயன்படுத்துவதைத் தவிர கடுகு எண்ணெயையும் சமையலுக்கு பயன்படுத்தலாம். கடுகு எண்ணெய்யை உடலில் தடவி குளிக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் முடிவடையும் தருணத்தில் தோன்றும் உடல்வலியின்போது கடுகு எண்ணெய் தேய்த்து குளித்தால் வலி நீங்கும்.
எலும்பிற்கு வலு சேர்க்கும் கடுகு!
கடுகில் செலினியம் (selenium) என்கிற தாதுச் சத்து நிறைந்திருப்பதால் உங்கள் எலும்புகளுக்கு இது மிகவும் நல்லது. எலும்புகளை வலுசேர்த்து உறுதியாக்குகின்றது. மேலும் கடுகு உங்கள் நகங்கள், தலைமுடி மற்றும் பற்களுக்கும் வலு சேர்க்க உதவுகிறது. கடுகில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் (Anti-oxidiants) மற்றும் ஆன்டி - இன்ப்ளாமேட்டரி (Anti-inflammatory)மூலக்கூறுகள் அடங்கியுள்ளது. இது ஈறுகள், எலும்புகள் மற்றும் பற்களில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது.
சருமத்தை மெருகேற்றும் கடுகு!
உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் நம் சருமம் வறண்டும், கடினத்தன்மையும் பெருகிறது. கடுகை அரைத்து முகம் மற்றும் சருத்தில் தடவி வந்தால், நம் உடலில் ஈரப்பதத்தை அளித்து சருமத்தில் உள்ள மாசு மறுக்களை நீக்கி பருக்களில் இருந்தும் பாதுகாக்கிறது. சருமமும் போலிவுருகிறது.
கடுகு விதைகளில் இருக்கும் விட்டமின் A, விட்டமின் K மற்றும் விட்டமின் C ஆகியவை வயது முதிர்ச்சியை குறைத்து இளமைத் தோற்றதை தக்கவைக்க உதவுகிறது.
நல்ல உணவு முறை நம் அரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. எனவே ஆரோக்கியமான வாழ்வை பெற நம் முன்னோர்கள் ஆன்றாடம் பயன்படுத்தி வரும் உணவு முறைகளை வரும் காலாத்திற்கும் எடுத்து செல்லவேண்டியது அவசியமாகிறது.