Health & Lifestyle

Thursday, 15 July 2021 05:33 PM , by: Aruljothe Alagar

Ambal poo (Alli Poo)

அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீரில் வளரும் செடியாகும் ஆம்பல் ஆகும். இதன் மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும். வெள்ளை நிற மலர்களை வெள்ளையல்லி எனவும் செந்நிற மலர்களை செவ்வல்லி எனவும் அழைக்கிறோம். குளம் குட்டைகளில் வளரும் ஆம்பலின் இலை, பூ, விதை, கிழங்கு ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்கள் உடையவை.

புராண காலங்களில் பெண்களில் முகத்தை தாமரை மற்றும் அல்லியுடன் ஒப்பிடுகிறார்கள். அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும்  கொடி ஆகும். அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், ஆறுகளிலும் வளரும் தன்மைக் கொண்டது. அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன.

ஆம்பல் மலரின் மருத்துவப் பயன்கள்

1. இந்த மலரின் மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம் ஆகியவை தணியும்.

2. ஆம்பல் பூ‌வி‌ற்கு நீரிழிவை ‌சீரா‌க்கு‌ம் குண‌ம் உ‌ள்ளது. வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும்.

  1. கோடை காலத்தில் வெப்பத்தில் குழந்தைகளுக்கு சூடு கட்டி வரும். அல்லி இலையையும், அவுரி இலையையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய தண்ணீரில் அரைத்து பூசினால் கட்டி சீக்கிரம் உடைந்து குணமடையும்.
  2. சிவப்பு ஆம்பல் இதழ்களுடன், செம்பருத்தி பூ இதழையும் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடிக்க வேண்டும். இதனால் இதயம் பலமடையும், மற்றும் இதய படபடப்பு ஏற்படாது, உடலில் ரத்தம் பெருகத் தொடங்கும்.
  3. ஆம்பல் இலையை தண்ணீரில் காய்ச்சி காயப்பட்ட இடங்களில் கழுவி வந்தால் எளிதில் காயம் ஆறும்
  1. உலர்ந்த வெள்ளை இதழ்களை தண்ணீரில் ஊறவைத்து காலை மற்றும் மாலையில் குடித்து வந்தால் சிறுநீரில் இரத்தம், சிறுநீர்ப்பாதைப்புண், சிறுநீர் மிகுதியாகக் கழிதல், தாகம், உட்காய்ச்சல் போன்றவை குணமாகும்.
  2. ஆம்பல் கிழங்கை உலர்த்திப் பொடியாக செய்து 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட்டு வந்தால் குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் போன்ற நோய்களும் குணமாகும்.
  3. 8. ஆம்பல்பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டியதில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தேனையும் பதமாகக் காய்ச்சி காலை மாலை 15 மி.லி யாகச் சாப்பிட்டு வர மூளைக்கொதிப்பு தணியும்

மேலும் படிக்க:

மதுரை மல்லி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)