கம்பில் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினசரி ஒரு வேளை கம்பு உள்ள உணவை எடுத்துகொள்வது சிறந்த பலனளிக்கும். கம்பில் பைட்டோ கெமிக்கல் உள்ளது, கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடிய, பைடிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் உறுதிப்படுத்துகிறது. இதன்மூலம் கெட்ட கொழுப்பை கரைக்க முடியும்.
கம்புவின் பயன்கள் (Benefits of Rye)
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் கம்பு மிகவும் சக்தி வாய்ந்தது.
- அதிக நார்ச்சத்து இருப்பதால், மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது இது மெதுவாக செரிப்பதால், குளுக்கோஸை மெதுவான விகிதத்தில் வெளியிடுகிறது.
- கம்பு உணவை வழக்கமாக உட்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தில் வரக்கூடிய மார்பகப்புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் உருவாகாமல் பாதுகாக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். உடலை நோய் தாக்காமல் பாதுகாத்துகொள்ளும்.
- கம்பங்கூழ், கம்பம் புட்டு, கம்பம் ரொட்டி, கம்பம் தோசை, கம்பு அடை என பலவிதமான கம்பு மூலம் செய்யப்படும். கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மற்ற சிறு தானியங்களைப் போலவே, நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது.
- கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவாகும். இதில் கொழுப்பு குறைவான அளவே உள்ளது. கம்பை கூழாக குடித்து வரும்போது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.
மேலும் படிக்க
கடைகளில் நீங்கள் வாங்கும் வாழைப்பழம் தரமானதா?
உடல் எடையை குறைக்க வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினாலே போதும்!