Health & Lifestyle

Tuesday, 13 August 2019 07:22 PM

மாதுளை என்றால் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது மாதுளம் பழத்தின் சிவந்த முத்துக்கள். ஆனால் அந்த மரத்தின் பட்டை, பூக்கள்,மாதுளை பிஞ்சு அனைத்து என பாகங்களிலும் மருத்துவ குணம் கொட்டிக் கிடக்கிறது.

மாதுளம் பூக்கள் அனைத்து வயது மக்களுக்கு தோன்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்து,  உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தருகிறது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என அனைவரும் மாதுளம் பழம் மட்டுமல்லது மரத்தின் பூக்கள், பட்டைகள், கொழுந்து, பிஞ்சு போன்றவற்றை தாராளமாக உண்ணலாம். ஆனால் எந்த நோய்க்கு, எவ்வளவு, எப்படி, எப்பொழுது என்பதை முழுமையாக தெரிந்து உண்ண வேண்டும்.

மாதுளம் பூவின் மகிமைகள்

கருப்பை கோளாறு

இன்று பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனை,கருப்பை கோளாறு, முறையற்ற மாதவிலக்கு, வெள்ளை படுத்தல் என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கு ஏற்ற மருந்து இந்த மாதுளம் பூ. மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்

மாதுளம் பூ - 50 கிராம்

மாதுளம் விதை - 50 கிராம்

மரத்தின் மேல் பட்டை - 50 கிராம் 

வால் மிளகு - 25 கிராம் 

மேலே சொன்ன  அனைத்து பக்கங்களையும் வெயில் நன்கு உலர்த்தி பொடியாக்கி சலித்து காற்று புகா வண்ணம் டப்பாக்களில் சேமித்து வைத்து கொள்ளலாம். தினமும் காலை, மாலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து பிரச்னைகளும் தீரும்.இந்த பொடியை தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

தாது விருத்தியடைய

பெண்களை போன்றே ஆண்களுக்கும் இது ஒரு சிறந்த மருந்து.  மாதுளை பூவை நன்கு காய வைத்து பொடி செய்து அதனுடன் அருகம்புல் பொடி சேர்த்து  தேனில் குழைத்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர தாது விருத்தியடையும்.

சிறுநீருடன் ரத்தம் கலந்து வருகிறதா

உடல் உசனத்தினால் சில சமயங்களில் சிறுநீருடன் ரத்தம் கலந்து  வெளியேறும்.இதற்கு தலை சிறந்த காய் மருந்து என்றே கூறலாம். மாதுளம் பூ, கசகசா,வேப்பம் பிசின் ஆகியவற்றை அரை ஸ்பூன் அளவு எடுத்து காலை, மாலை என இரு வேளையும் தேன்  கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீருடன் ரத்தம் கலந்து வருவது நிற்கும்.

நரம்புகள் வலிமை பெற

மாதுளம் பூவை பசும்பாலில் வேக வைத்து சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் நரம்புகள் வலிமை பெறும். குறிப்பாக  நரம்புத் தளர்ச்சியினால் அவதிப் படுபவர்களுக்கு இது ஒரு மாமருந்து.

இரத்த மூலம்

இரத்த மூலத்தினால் அவதி படுபவர்கள் அதிக செலவு செய்யாமல் மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் இரத்த மூலத்திலிருந்து விடு படலாம்.

தீராத தலைவலியா

தலைவலியை கூட மாதுளம் பூக்களைக் கொண்டு போக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?.. ஆம்  தலையில் மாதுளம் பூக்களை வைத்துக் கொண்டால் தலைவலி தீரும். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது.

தொண்டை வலி

தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி தீர மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

மூடி வளர

புழு வெட்டு பிரச்சனையால் தலையில் வழுக்கை போன்று உள்ளதா? மாதுளம் பூ சாறு எடுத்து அந்த இடத்தில் தேய்த்து வர விரைவில் புழு வெட்டு சரியாகும்.

Anitha Jegadeesan
Krishi Jagran 

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)