Health & Lifestyle

Monday, 03 February 2020 05:30 PM , by: KJ Staff

நமது உடல் மிகச்சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான  19 அமினோ அமிலங்களும், 92 தாதுக்களும் இந்த கோதுமைப்புல்லில் உள்ளது. செயற்கையாக ஒளியூட்டப்பட்ட உள்கூடங்களிலும், கண்ணாடிக் கூரை பொருத்தப்பட்ட கூடங்களிலும் பயிரிடப்படுகிறது. வயலில் இயற்கையாக வளர்ந்துள்ள மூன்று மாதம் நிரம்பிய கோதுமைப்புல்லின் இலைகளை சாறு எடுத்து, நீர்ப்பதம் போக நன்கு உலர வைத்து, அதிலிருந்து கோதுமைப்புல் பொடி தயாரிக்கப்படுகிறது. இந்த பொடியில், ‘க்லோரோபில்’  என்றழைக்கப்படும் பச்சையமும் மிக அதிகமாக உள்ளதால், இதனை மிகவும் சத்து நிறைந்த பொடி என்று கூறப்படுகிறது.

‘கோதுமைப்புல்’ விளைவிப்பது எப்படி?

கோதுமையை நிலத்தில் தூவி வளர்த்தால் 7 முதல் 14 நாட்களில் நாற்று மாதிரி வளரும். முதலில் 6 சதுர அடி நிலம் அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் மணலை நிரப்பிக் கொள்ள வேண்டும். அதில் தண்ணீர் ஊற்றி ஈரப்படுத்தி அதை ஏழு கட்டங்களாக பிரிக்க வேண்டும். பின்பு கோதுமையை 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தொட்டியில் முதல் கட்டத்தில் போட வேண்டும். அதுபோல் 7 கட்டத்திலும் 7 நாட்களுக்கு போட வேண்டும். ஏழாவது நாள் முதல் கட்டத்தில் விதைத்த கோதுமை முளைத்துவிடும். இதுபோல் வளர்ச்சி அடைந்த புல்லை எடுத்து, நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து, பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி ஒரு நபருக்கு 30 மிலி வீதம் அருந்தலாம்.

‘கோதுமைப்புல்’ சாற்றின் நன்மைகள்

  • ஒரு டம்ளர் கோதுமைப்புல் சாற்றில் நீர்ச்சத்து - 65%, புரதம் - 20%, கொழுப்பு - 3%, மாவுச்சத்து - 12%, நார்ச்சத்து - 1%, கால்சியம் - 40 மி.கி, இரும்பு - 6 மி.கி., வைட்டமின் B1 - 1.4 யூனிட், B2 - 0.54 யூனிட், நியாசின் - 2.90 யூனிட் மற்றும் வைட்டமின் A, B, C, E & K ஆகியவை உள்ளன.
  • இந்த சாறானது ரத்ததினை சுத்தம் செய்வதோடு, ரத்தத்தில் வெள்ளை, சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணுகிறது.
  • இந்த சாறு புற்று நோய் வராமல் தடுப்பதோடு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் ரீதியிலான தொந்தரவுகளையும் குறைத்து, குணமடைய உதவுகிறது.
  • உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் இந்த சாறு, சிறுகுடல், பெருங்குடலை சுத்தம் செய்கிறது.
  • தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவும் இது, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, மலச்சிக்கலையும் போக்குகிறது. 

எடையை குறைக்க உதவும் ‘கோதுமைப்புல்’ பொடி

கோதுமைப்புல் பொடியினை பழரசங்களில் மட்டுமல்லாது, உணவுப் பொருட்களில், வாசனைப் பொருளாகவும், மாற்று உணவாகவும் சேர்க்க முடியும். உடற்பயிற்சி நேரங்களில், நீண்ட நேரத்திற்கு உடற்பயிற்சி செய்ய உதவுகிறது. இதனால் உடல் எடை குறைய வழிவகுக்கிறது. மேலும் தைராய்டு சுரப்பிகளைத் தூண்டி, எடை அதிகரிப்பதைக் குறைக்கிறது. மேலும் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் பெருக்கத்தையும், செரிமானமின்மையையும் இது தடுக்கிறது.

கோதுமைப்பொடியின் இதர நன்மைகள்

  • இரத்தத்தில் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் வீதத்தை மட்டுப்படுத்துவதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவினை இது கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.
  • இதில் குளோரோபில், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளதையடுத்து, இது மூலநோயினை குணப்படுத்த வல்லது என்று நீருபிக்கப்பட்டுள்ளது.
  • கோதுமைப்புல் பொடியைக் கொண்டு, ஈறுகளை மசாஜ் செய்து வந்தால், ஈறுகள் வலிமையடையும். இதர பல் பிரச்சனைகளும் தீரும்.
  • கோதுமைப்புல் பவுடரைத் தவறாமல் சாப்பிட்டு வந்தால், கண்கள் பிரகாசமாகத் திகழ்ந்து பார்வை பொலிவு பெறும்.
  • ஆண்களுக்கும், பெண்களுக்கும் இனப்பெருக்க சக்தியை அதிகரித்து, கருவுற உதவுகிறது.
  • கோதுமைப்புல் பொடியைத் தலையில் தடவிக் கொண்டு குளித்து வந்தால், பொடுகு, வறட்சி மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்ற தலை சார்ந்த பிரச்சனைகள் தீரும். நரைத்துப் போன தலைமுடியின் நிறத்தை மாற்றி, பழைய படி கருமையாக்கும் தன்மை கோதுமைப்புல் பொடிக்கு உண்டு.

M.Nivetha
nnivi316@gmail.com

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)