தட்டையான தொப்பையை பராமரிப்பது என்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிப்பதாகும். எனவே தனித்தனியாக கவனம் செலுத்துவதற்கு பதிலாக, தொப்பைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதே நல்லது.
எடை இழப்பு என்று வரும்போது, மக்கள் பெரும்பாலும் தொப்பையை குறைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். தட்டையான வயிறு என்பது பலரது கனவாக உள்ளது. அதே நேரத்தில் அதை அடைய மெனக்கிடவும் தயாராக இருக்கிறார்கள்.
பொதுவாக இடுப்புப் பகுதியானது நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். நீங்கள் டயட்டில் இருக்கும்போது தொப்பையை மட்டும் குறிவைப்பது எளிதல்ல. ஆனால் ஒட்டுமொத்தமாக உடல் எடையை குறைப்பது, வயிற்றில் உள்ள கொழுப்பின் அபாயகரமான அடுக்குகளையும் குறைக்க உதவும்.
என்ன செய்வது?
சர்க்கரை, சர்க்கரை கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் உங்களுக்கு நல்லதல்ல; அவற்றை உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும். இது உங்கள் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் இது பழங்களுக்கு பொருந்தாது, அவை நார்ச்சத்து நிறைந்தது மற்றும் ஆரோக்கியமானவை. குறைவான கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது கொழுப்பை இழக்க ஒரு வழியாகும். எடை இழப்புக்கு உதவும் கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கும்போது உங்கள் பசி குறைகிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.
நார்ச்சத்து உணவு
நிறைய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, எடை குறைக்க உதவும். காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட தாவர உணவுகளை சாப்பிடுவதே சிறந்த வழி. முழு ஓட்ஸ் மற்றும் பருப்பு வகைகள் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்கள்.
வழக்கமான உடற்பயிற்சி
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் எடை மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்க உடற்பயிற்சி சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் உங்கள் தொப்பையை பெருமளவில் குறைக்கும்.
தகவல்
நடாஷா மோகன்
உணவியல் நிபுணர்
மேலும் படிக்க...
7 டன் ரசாயன மாம்பழங்கள் - அதிரடி பறிமுதல்!
வங்கிக்கணக்கில் வந்த ரூ.1.42 கோடி சம்பளம்- தப்பியோடிய ஊழியர்!