Health & Lifestyle

Sunday, 19 September 2021 07:20 AM , by: Elavarse Sivakumar

Credit: The New York Times

தடுப்பூசி போடுவோரை ஊக்குவிக்கும் வகையில் ஆன்ட்ராய்ட் போன் பரிசாக வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தடுப்பூசியேத் தீர்வு (Vaccine solution)

உலக நாடுகளை உலுக்கி எடுத்தக் கொரோனா, இந்தியாவின் பல மாநிலங்களிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. கோவிட் 19 எனப்படும் இந்த வைரஸ் தொற்றில் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்வதே கடந்த 2 ஆண்டுகளாக பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இருப்பினும் நமக்கு இப்போது இருக்கிற ஒரே ஆறுதல் கொரோனாத் தடுப்பூசி. இதனைப் போட்டுக்கொண்டால், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதே மிகச்சிறந்தத் தீர்வாகக் கருதப்படுகிறது.

பரிசுகள் (Gifts)

அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை தடுப்பூசி செலுத்துக்கொள்ளுமாறு கட்டாயப்படுகின்றன.
அதேநேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச பெட்ரோல், பரிசுத் தொகை, குலுக்கல் முறையில் பரிசுகள் என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற போது, தடுப்பூசி செலுத்துபவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கக் காசு, வெள்ளிப் பொருட்கள், புடவை உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

இந்நிலையில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு, ஆன்ட்ராய்ட் செல்போன் பரிசாக வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாளை நடைபெற உள்ளத் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆண்ட்ராய்ட் மொபைல் 3 பேருக்கு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மீம்ஸ் (Memes)

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பான 10 மீம்ஸ்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் மீம்ஸ் போடுபவர்கள் மாவட்ட ஆட்சியரை டேக் செய்து பதிவிட வேண்டும் என்றும் 25ஆம் தேதிக்குள் இதனை செய்ய வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

இன்னும் 6 மாதங்கள்தான்- கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என அறிவிப்பு!

கொரோனாத் தடுப்பூசி போடவில்லையா?-ரேஷன் பொருட்கள் கிடையாது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)