Health & Lifestyle

Friday, 03 May 2019 12:52 PM

நம் சிறு வயதிலிருந்தே அம்மா நம்மிடம் தினமும் ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடலில் நோய் எளிதில் ஏற்படாது என்று கூறுவர் .ஆப்பிளில் அதிக வைட்டமின்கள் உள்ளன மற்றும் இதனால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு. ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் ஆப்பிள் தேநீரில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா. ஆப்பிள் சாப்பிடுவதை விடை ஆப்பிள் தேநீர் குடிப்பதில் அதிக நன்மைகள் உள்ளது.

எப்படி குடிக்கலாம் ?

நீங்கள் இந்த தேநீரை பருக விரும்பினால் காலையில் பால் தேநீருக்கு பதிலாக இந்த ஆப்பிள் தேறுநீரை குடிக்கலாம். மற்றும் உணவு உண்ட பிறகும் இந்த தேநீரை பருகலாம், இது செரிமானத்திற்கு பயனுள்ளதாக அமைகிறது.

 ஆப்பிள் தேநீரின் நன்மைகள்:

எடை குறைக்க உதவும்: காலையில் இந்த 1கப் ஆப்பிள் தேநீர் குடிப்பதால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. பருமனாக இருப்பவர்கள் மற்றும் எடை குறைக்க நினைப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஆப்பிள் தேநீரை பருகி வந்தால் மிக விரைவில் எடை குறைய உதவும். இந்த தேநீர் அதிக உணவு உட்கொள்வதை கட்டுப்பாட்டில் வைக்கிறது,  மற்றும் நாள் முழுவது சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.

நோய் எதிர்ப்பு சத்தி:  

இந்த ஆப்பிள் தேநீர் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் சிறுநீர் எளிதில் வெளியேற்றி விடும். மேலும் உடலில் இருந்து நச்சு பொருட்களை அகற்றும் பணியை செய்கிறது. எனவே உடலில் உள்ள தேவையற்ற நச்சுத்தன்மை வெளி ஏற்றி நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது.  

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த :

ஆப்பிள் தேநீரில் உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. நீரிழிவு நோய் இருப்பவர்கள் இந்த ஆப்பிள் தேநீரை குடித்து வந்தால் சர்க்கரை  அளவு குறையும்.

எப்படி செய்வது இந்த தேநீரை?

ஆப்பிள் தேநீர் செய்வதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனுள் ஆப்பிளை வெட்டிப்போட்டு  10 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் டீ தூள், லவங்கம், பட்டையை சேர்த்து 2 ல் இருந்து 3 நிமிடம் வரை கொதிக்க வேண்டும். பின் அதை நன்றாக ஆரவைத்து விட்டு ஆரிய பிறகு அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இதனை பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். எந்த வித பாதிப்பும் வராது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)