பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 December, 2022 1:28 PM IST
Eggs

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. நிறைய பேர் முட்டையை வாங்கி பிரிட்ஜில் வைத்து உபயோகிப்பார்கள். பிரிட்ஜின் உள்பகுதியிலும் நிலவும் வெப்பநிலை மாற்றம் முட்டையின் தன்மையை எதிர்மறையாக பாதிக்கும். அதிக நாட்கள் முட்டையை சேமித்து வைக்காமல் ஓரிரு நாட்களுக்குள் உபயோகிப்பது நல்லது.வாங்கி வரும் முட்டை புதியதா? பழையதா? என்பதையும் எளிய சோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.

முட்டை (Egg)

கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி அதனுள் முட்டையை மெதுவாக போட வேண்டும். முட்டை முழுவதுமாக மூழ்கி டம்ளரின் அடிப்பகுதியில் கிடைமட்டமாக ஒட்டியிருந்தால் அது புதிய முட்டை. டம்ளருக்குள் ஒருபக்கமாக சரிந்த நிலையில் இருந்தால் ஒரு வாரம் ஆகி விட்டது என்று அர்த்தம்.

நன்றாக சாய்ந்த நிலையில் மிதந்து கொண்டு இருந்தால் 2 அல்லது 3 வாரம் பழையதான முட்டை என்று அர்த்தம். எனினும் அந்த முட்டை பயன்பாட்டுக்கு உகந்தது. ஆனால் தண்ணீருக்குள் போட்டதும் முட்டை மிதந்து கொண்டிருந்தால் அந்த முட்டை ரொம்ப பழையது அல்லது கெட்டுப்போனது என்று அர்த்தம். அதனால் அந்த முட்டையை தவிர்ப்பது நல்லது. நாளாக நாளாக முட்டைக்குள் இருக்கும் காற்று விரிவடையும். முட்டைக்குள் இருக்கும் நீர்பரப்பை காற்று நிரப்பிவிடும். அதனால் முட்டை மிதக்க தொடங்கும்.

கெட்டுப்போன முட்டையை சாப்பிடுவது உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் முட்டையின் உள்ளடுக்குகளில் இருக்கும் சால்மோனெல்லா எனும் ஒரு வகை பாக்டீரியா வளர்ச்சி அடைய தொடங்கிவிடும்.

அதனை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும். முட்டையை காது பக்கத்தில் கொண்டு சென்று குலுக்கும்போது, சலசலவென்று சத்தம் வந்தால் அது கெட்டுப்போன முட்டை என்று அர்த்தம்.

மேலும் படிக்க

மெட்ராஸ்-ஐ வந்தால் என்ன செய்ய வேண்டும்?

ரேஷன் கடைகளில் இது கட்டாயம் கிடையாது: முக்கிய அறிவிப்பு!

English Summary: Are eggs old? Is it new? How to know?
Published on: 11 December 2022, 01:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now