தற்போதைய அவசர உலகில் சரிவர சாப்பிடவே பலருக்கும் நேரம் இருப்பதில்லை. பிரெட், பழங்கள், நட்ஸ்கள் என சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. போதாக்குறைக்கு பழங்களில் தான் சத்து உள்ளது. பிரெஷ் ஆக சாப்பிடும் போது அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.
இதில் எளிதாகவும், விலைக்குறைவாகவும் கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை வேண்டாம் என்று கூறுபவர்களே இல்லை . குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணும் வாழைப்பழத்தில் வைட்டமின், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் என, மனித உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சத்துக்கள் நிறைய உள்ளன.
வாழைப்பழம் (Banana)
கடைகளில் கிடைக்கக்கூடிய வாழைப்பழங்களை அப்படியே பலரும் வாங்கிவிடுகின்றனர். இயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களில் மட்டுமே முழுமையான சத்துக்கள் உள்ளன. ஆனால் கடைகளில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களே பெரும்பாலும் கிடைக்கின்றன. அப்போது சத்துக்கள் முழுமையாக கிடைப்பதில்லை; உடலுக்கும் வீண் பாதிப்பு உண்டாகிறது.
எனவே, வாழைப்பழம் இயற்கையாக பழுத்ததா அல்லது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா என எப்படி அறிந்து கொள்வது? ரொம்ப ஈசிதாங்க.. ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழத்தை பார்த்ததும் கண்டுபிடித்து விடலாம். இயற்கையாக பழுத்த வாழைப்பழத்தில் பிரவுன் நிற புள்ளிகள் இருப்பதை பார்க்க முடியும்.
இரசாயன முறை (Chemical Method)
ரசாயனத்தை கொண்டு செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள், ஒரே சீரான மஞ்சள் நிறத்துடன் இருக்கும். வாழைப்பழத்தின் காம்பும் பழம் அளவுக்கு மஞ்சள் நிறத்துக்கு மாறும். பழத்துக்கே உரிய மணம் இருக்காது; சுவையும் குறைவாக இருக்கும். வாழைப்பழங்களை பார்த்தாலே இந்த வித்தியாசம் எளிதாக தெரியும்.எனவே இனி வாழைப்பழம் வாங்கும்போது, நன்றாக பார்த்துவிட்டு இயற்கையாக பழுத்த பழங்களை வாங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாமே.
மேலும் படிக்க