Health & Lifestyle

Wednesday, 29 September 2021 08:07 AM , by: R. Balakrishnan

Benefits in onion leaf

பொதுவாக, நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் சிறிய மற்றும் வெங்காயத்தாள் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இது பலாண்டு (Palandu) என குறிப்பிடப்படுகிறது.

நன்மைகள்

  • ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயத்தாள் சாறு பலவிதமான பிரச்னைகளைக் குணப்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது. ரத்தம் இறுகிப் போவதைத் தடுத்து அதனை நீர்த்துப் போக செய்கிறது.
  • ரத்தத்தில் கெட்ட கொழுப்பு (Fat) அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதில், கந்தகச் சத்து ஏராளமாக இருப்பதால் சருமம் தொடர்பான நோய்கள் வராது.
  • ஜீரண சக்தியை அதிகரித்து நரம்பு செல்களைப் பலப்படுத்தும். நினைவாற்றலை அதிகரித்து அறிவுத்திறன் வளர்க்க உதவும்.
  • மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகள் இதனால் சரி செய்யப்படுகிறது. பக்கவாதம் ஏற்படுவதையும் வெங்காயத்தாள் (Onion Leaf) தடுக்கிறது.
  • வெங்காயத் தாள் சாறைத் தொடர்ந்து குடித்து வந்தால் இதயத்தில் ஏற்படுகிற அடைப்பு90%குறையும்.
  • காய்ச்சலைக் குணப் படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
  • காரத்தன்மை உள்ள இந்த சாறை அருந்த சிரமப்படுபவர்கள், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம்.
  • வெங்காயத் தாளினை கூட்டாகவோ, சூப்பாகவோ, சட்னியாகவோ பல விதங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

மருத்துவக் குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்கள்!

மணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)