மற்ற பருவநிலைகளை விட குளிர் காலத்தில் நாம் மிகவும் பாதுகாப்பாக இருத்தல் அவசியம். நோய் கிருமிகள் குளிர் காலங்களில் அதிக அளவில் உண்டாக கூடும். எனவே நமது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் குளிர்காலங்களில் மீன் (Fish) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
மீன் சாப்பிடுவதன் நன்மைகள் (Uses of Fish)
அதிக அளவிலான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீனில் நிறைந்துள்ளன. குளிர்காலங்களில் மீன் சாப்பிட்டு வருவதால் நுரையீரலின் மூச்சு குழாய் பாதையில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தும். இதனால் நுரையீரல் பகுதியில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். எனவே உங்களுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலை தடுக்கும்.
குளிர்காலத்தில் மீன் சாப்பிடுவதால் தோலின் நலனிற்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மீனில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் தோலின் மேற்பகுதியை வறண்டு போகாமல் வைக்கும். இதனால் தோல் எப்போதும் பொலிவாக இருக்க இது உதவும்.
பக்கவாதத்திற்கும் குளிர்காலத்திற்கும் அதிக தொடர்புண்டு. ஆம், குளிர் காலங்களில் பக்கவாத பாதிப்பு வருவதால் மிகவும் சிரமம்பட கூடும். எனவே இதில் இருந்து உங்களை காக்க, மீன் சாப்பிட்டு வந்தால் போதும். இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும்.
மீனில் அதிக அளவிலான நல்ல கொழுப்புகள் உள்ளன. எனவே மீன் சாப்பிட்டு வருவதால் மூளைக்கும், கண்களுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தை தரும். மேலும் மீன் உணவுகள் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
மீனில் நிறைவுற்ற கொழுப்பு இல்லாததால், இதை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. கண் மற்றும் மூளைக்கு மட்டுமன்றி மீன் சாப்பிடுவதால் இதயத்திற்கும் நல்லது. எனவே வாரம் ஒரு முறை மீன் சாப்பிட்டால் இதய நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கலாம்.
உடலுக்கு மற்ற ஊட்டச்சத்துக்களை விடவும் வைட்டமின் டி மிக முக்கியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மீனில் வைட்டமின் டி (Vitamin D) மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே மீன் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்து கொண்டு ஆரோக்கியமாக வைக்கும்.
மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் இதழ் வெளியிட்ட சமீபத்திய ஆய்வில் தொடர்ந்து மீன் சாப்பிட்டு வருவதால் இதயத்தின் செயல்பாடுகளை சீராக வைத்து, மன அழுத்தத்தை குறைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் போதுமான அளவு இருந்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று பல ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது 2 முறை மீன் சாப்பிடுவது கண்களுக்கு மிக ஆரோக்கியம்.
மேலும் படிக்க