சமையலுக்கும், ரசம் வைப்பதற்கும் மட்டுமே தக்காளி பயன்படுகிறது என பலரும் நினைக்கின்றனர். ஆனால், தக்காளியை (Tomato) பச்சையாக, சுத்தம் செய்து சாப்பிடும் போது ஏராளமான சத்துகளும், நன்மைகளும் கிடைக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? இப்படி சாப்பிடும் போது, உடலுக்கு பலம் கிடைக்கிறது. உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு, இது ஒரு சிறந்த டானிக் ஆக அமைகிறது.
தக்காளியின் நன்மைகள் (Uses of Tomato)
தக்காளியில் வைட்டமின் "ஏ' சுமார், 91 மில்லி கிராம் அளவு உள்ளது. வைட்டமின் "பி1', "பி2', 17 மில்லி கிராமும், வைட்டமின் "சி', 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் உள்ளன. தவிர, உடலில் ரத்த உற்பத்திக்கு (Blood Production) பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், சீரான ரத்த ஓட்டத்துக்கும் பயன்படுகிறது.
ஒவ்வொரு நாளும், காலை, மாலை என, தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) அபரிமிதமாக கிடைக்கும்.
உடல் பருமனால் அவதிப்படுவோர், இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் இளைத்து அழகிய தோற்றம் கிடைக்கும். காரணம், தக்காளியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கிறது.
செரிமான குறைபாடு, நெஞ்செரிச்சல், இரப்பை கோளாறு, கல்லீரல் பாதிப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு தக்காளியை தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் "சி' உள்ளதால், தொடர்ந்து சாப்பிடுவது, இருதயத்துக்கு நல்லது. அத்துடன், உடம்பில் அதிக அளவு கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
மேலும் படிக்க