Health & Lifestyle

Sunday, 22 August 2021 10:18 PM , by: Elavarse Sivakumar

எலுமிச்சை பழத்தில் உள்ள நன்மைகள் அனைவருக்கும் தெரியும்.ஆனால் எலுமிச்சை பழத்தை அதிகம் உட்கொண்டால் உடலில் பலபக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

தெய்வீகத்தன்மை (Divinity)

பக்தியானாலும், விரதச் சாப்பாடானாலும் சரி, எப்போதுமே எலுமிச்சைப்பழத்திற்கு முக்கிய இடம் உண்டு. இதன் காரணமாகவே இந்த பழத்தை தெய்வீகத்தன்மைக்கு ஒப்பிடுவார்கள்.

அத்தகைய எலுமிச்சைப்பழத்தை உண்பதால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அதேநேரத்தில் இந்தப் பழத்தை அதிக அளவில் எடுத்துக்கொண்டால், சிலப் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின் சி தவிர, எலுமிச்சையில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்களும் உள்ளன.

ஆனால் சிலருக்கு எலுமிச்சை மிகவும் தீங்கு விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் எலுமிச்சை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

அமிலத்தன்மை (Acidity)

அமிலத்தன்மை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி நீங்கள் எலுமிச்சை நீரை உட்கொள்ள விரும்பினால், வெதுவெதுப்பானதாகத் தண்ணீரில் எலுமிச்சை பிழிந்த பிறகு, தேனையும் சேர்த்து உட்கொள்ளலாம்.

வாய்ப்புண்

உங்களுக்கு வாய்ப்புண் இருந்தால் நீங்கள் எலுமிச்சை சாப்பிடுவதைக் கட்டாயம் தவிர்க்கவும். நீங்கள் எலுமிச்சை சாப்பிட்டால், அது எரிச்சல் மற்றும் வீக்கம் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

சிறுநீரகப் பிரச்சனை (Kidney problem)

உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், நீங்கள் கண்டிப்பாக எலுமிச்சைப் பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நெஞ்சிஎரிச்சல் (Heartburn)

எலுமிச்சை சாறு வயிறு உபாதைகளை தீர்க்கும். அதிகமாக பயன்படுத்தினால் அதில் உள்ள சிட்ரிக் அமிலம் நெஞ்சிஎரிச்சலை உண்டாக்கி விடும்.

சருமத்தை வறட்சியாக்கும் (Drying the skin)

எலுமிச்சை சாற்றை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சிசுக்களை நீக்கும்.வறட்சியான அல்லது எண்ணெய்ப் பிசுக்கு குறைவான சருமத்தில் தேய்க்கும் போது அது சருமத்தை மேலும் வறட்சியாக்கும்.
எனவே எலுமிச்சைப்பழத்தைப் பயன்படுத்தும்போது, இந்த தகவல்களை மனதில் வைத்துக்கொள்வது நல்லது.

மேலும் படிக்க...

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)