நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை தலைமுடி பிரச்சனை... இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிப்பு அடைகிறார்கள். தொடர்ந்து முடி உதிர்வு, வழுக்கை, நீளம் இருந்தாலும் ஒல்லியாக வால் போல இருப்பது என பொதுவாக சொல்லலாம். நம் ஆயுர்வேதம் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு வழங்கியுள்ளது. எனினும் நாம் முதலில் முடி உதிர்வுக்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
முடி உதிர்வு மற்றும் அதற்கான காரணம்
- முதுமை காரணமாக
- மன அழுத்தம்
- வைட்டமின் A அதிகரிப்பது
- இரும்பு சத்து /புரத சத்து குறை பாடு
- ஹார்மோன் பிரச்சனை/ தைராய்டு
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
- மாத்திரைகள் அதிக அளவில் எடுப்பது
- ஓவரி பிரச்சனை
- ரசாயனம் கலந்த ஷாம்பூ பயன் படுத்துதல்
- தூக்கமின்மை
- மலசிக்கல்
மேலே இவை எல்லாம் தலை முடி பிரச்சனைக்கான காரணங்கள். இனி இதற்கான தீர்வினை எவ்வித ரசாயண கலப்பு இல்லாமல் இழந்த கூந்தலை பெற எளிய வழிகள். கூந்தலை முதலில் குழந்தையை பராமரிப்பது போல பராமரிக்க வேண்டும்.
கூந்தல் பராமரிப்பு
- முதலில் கூந்தலுக்கு பயன்படுத்தும் தண்ணீரில் கவனம் செலுத்த வேண்டும். எல்லா வகை தலை முடிக்கும் உப்பு தண்ணீர், உப்பு தன்மை உள்ள தண்ணீரை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- சூடு தண்ணீர் முடி வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. சூடு தண்ணீர், வெதுவெதுப்பான தண்ணீர் என எவ்வகையாக இருந்தாலும் தவிர்த்து விடுங்கள். உச்சி வெயிலில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
- அடுத்ததாக நாம் தேர்தெடுக்கும் ஷாம்பு, ரசாயனம் கலந்த ஷாம்பு உங்கள் கூந்தல் வளர்சிக்கு எவ்விதத்திலும் உதவாது. எனவே ரசாயனம் இல்லாத , இயற்கையான முறையில் உள்ள சீக்காய், கற்றாழை, செம்பருத்தி, வெந்தயம் இவற்றை உபயோகிக்க முயற்சி செய்யுங்கள். பக்க விளைவுகள் இல்லாமல் உங்களையும், உங்கள் உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
- தலை முடியினை உலர்த்துவதற்கு ஹேர் ட்ரயிர் போன்றவற்றை பயன் படுத்த கூடாது. மெல்லிய துணியினை கொண்டு மெதுவாக துவட்ட வேண்டும் எக்காரணத்தை கொண்டும் மின்சாதனங்களை உபயோகிக்க கூடாது.
- ஈர கூந்தலை முறுக்கவோ, இறுக்கமாக கட்டவோ அல்லது சிப்பு கொண்டு வாரவோ கூடாது. இதனால் தலை முடி உடைந்து விடும்.
- பண்டைய முறை படி எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்க வேண்டும். நம் கேரள பெண்களின் கேசத்தின் ரகசியமும் இது தான். தினமும் இயலவில்லை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
- அதிக வெயில், அதிக தூசி இரண்டுமே தலை முடி வளர்ச்சியினை பாதிப்பவை. எனவே கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
- தூக்கம் மிக மிக முக்கியம். ஆழ்ந்த தூக்கம், அளவான சத்துள்ள உணவு இவை இரண்டும் கூந்தல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. மெல்லிய பருத்தி இலைகளான தலையணை, தலையணை உறை போன்றவற்றை பயன் படுத்த வேண்டும்.
- நீங்கள் பயன்படுத்து சிப்பினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம், மேலும் வாரம் ஒரு முறையேனும் சிப்பினை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
- மலசிக்கல், அஜீரணம் போன்றவை ஏற்படாமல் உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள வேண்டும்.
- ஈர தலையில் எண்ணெய் தேய்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- இரவு நேரங்களில் எண்ணெயினை மிதமாக சூடு செய்து கூந்தல்களின் மயிர் கால்களில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சிறிதளவு அடி பாதங்களில் தேய்க்க ஆழ்ந்த துக்கம் வரும். இதை அனைவரும் முயற்சி செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.
Anitha Jegadeesan
Krishi Jagran