இன்றைய நவீன உலகில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறார்கள். பொதுவாக உடல் பருமன் அல்லது ஊளைச் சதையை கெட்ட கொழுப்புக்களின் வெளிப்பாடாக கூறுவர். இதற்கு முக்கியக் காரணம் இன்று உடல் உழைப்பு குறைந்து விட்டது. இயற்கையில் இருந்து நம்மை நாமே தனித்துக் கொண்டு இருக்கிறோம்.
நடப்பது குறைந்து விட்டது, சமயலறை முழுவதும் மின் சாதனங்கள் ஆக்கிரமித்து விட்டன, குழந்தைகள் செல்போனில் விளையாடுகிறார்கள்... அலுவலகத்திலும் நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, எதற்கும் எழுந்திருப்பது கிடையாது... நினைத்த நேரங்களில், நினைத்த இடத்தில், நினைத்த உணவை சாப்பிடுவது. வளர்ச்சி என்ற பெயரில் இந்த விஞ்ஞானம் நம்மை கைதிகள் போல வீட்டினுள்ளே கட்டி வைத்துள்ளன. எதற்காகவும் நாம் வெளியில் வர தேவையில்லை. ஒரு போன் கால் செய்தால் போதும். அனைத்தும் நாம் கண்முன்.... விளைவு?
குறைப்பதற்கான தீர்வு
முதலில் நம் உடலில் நன்மை செய்யும் கொழுப்புகள், தீமை செய்யும் கொழுப்புகள் என இருவகை கொழுப்புகள் உள்ளன. தீமை செய்யும் கொழுப்புகள் அதிகமானால் உடலில் ஊளைச் சதை ஏற்படும். வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எடையை குறைப்பதற்கான எளிய வழி இதோ..
- நீங்கள் குடிக்கும் தண்ணீரில் சோம்பு கலந்த பருகி வந்தால் உடம்பில் உள்ள அதிகப்படியான ஊளைச் சதையை குறைந்து விடும்.
- வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை காலை நேரங்களில் வெறும் வயிற்றில் தொடர்ந்து பருகி வந்தால் சதை போடுவதைத் தடுக்கலாம்.
- சாப்பிடும் உணவில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து செரிமானத்தை அதிகப்படுத்தி , உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
- சுரைக்காய், வெள்ளை பூசணி இவற்றை சாறு எடுத்து சீராக பொடி கலந்து பருகி வந்தால் உடல் எடை கோரியும்.
- பப்பாளிக்காயை அடிக்கடி சமைத்து உண்டு வந்தால் தேகம் மெலியும். இவற்றை தவிர, மந்தாரை வேரை நீர் விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் உடல் மெலியும்.
- அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரக பொடி இரண்டினையும் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
- சூடு தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து வெறும் வயற்றில் காலையில் குடித்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும்.
- உணவு உண்டு 20 முதல் 30 நிமிடங்கள் சென்ற பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை குடிப்பது மிகவும் நல்லது. இதை உங்கள் வாழ்நாள் முழுவதும் பழகிக் கொண்டால் எந்த ஆரோக்கிய பிரச்சனையும் உங்களை நெருங்காது.
- எல்லாவற்றிற்கும் மேலாக நடைபயிற்சி, உடற்பயிற்சி , யோகா என ஏதேனும் ஒன்றை வீட்டில் கட்டாயமாக்குங்கள். வீட்டில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, அலுவலகம் செல்பவர்களாக இருந்தாலும் சரி, இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்யுங்கள்.
- அலுவலகம் செல்பவர்கள் எனில் எப்போதும் லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்து ஏதேனும் ஒரு சமயம் படிக்கட்டுகளை பயன் படுத்துங்கள்.
Anitha Jegadeesan
Krishi Jagran