கொரோனா தடுப்பூப் போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு இதுவரையில் இல்லாத வகையில், கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் வீக்கம் உள்ளிட்ட 4 புதிய அறிகுறிகள் தென்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே தீர்வு தடுப்பூசிதான் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இதனால், அமெரிக்க, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகின்றன. பல நாடுகளில் மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, உற்பத்தியை உள்நாட்டிலேயே தயாரித்து வருகின்றன.
அதிர்ச்சித் தகவல்கள் (Shocking information)
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2வது டோஸ் போட்ட பல்லாயிரம் பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் பல ஆயிரம் பேர் இவ்வாறு பாதித்துள்ளனர். இது பற்றி லண்டன் கிங்ஸ் கல்லூரியில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
தடுப்பூசிப் போட்டவர்களுக்கும் தொற்று (Infection in vaccinated persons)
அதன்படி, 11 லட்சம் மக்களிடம் நடந்த ஆய்வில் முதல் டோஸ் போட்டவர்கள் 0.2%, 2வது டோஸ் போட்ட 0.3% பேர் தொற்றால் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
4 புதிய அறிகுறிகள் (4 new symptoms)
வழக்கமாக கொரோனா பாதித்தவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை அறிகுறிகளாக உள்ளன. ஆனால், தடுப்பூசிப் போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் வித்தியாசமாக 4 புதிய அறிகுறிகள் தென்படுவது உறுதியாகி இருக்கிறது.
தும்மல் (Sneezing)
கொரோனாத் தொற்று உறுதியான பெரும்பாலானவர்களுக்கு பொதுவாக இருக்கும் அறிகுறி தும்மல். தடுப்பூசி போட்ட 60 வயதுக்கும் கீழ் உள்ளவர்களில் 24% மக்கள், தும்மல் அறிகுறியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மூச்சுத் திணறல் (Shortness of breath)
இந்த அறிகுறி மிக முக்கியமானது. தடுப்பூசி போட்ட மக்களும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுகின்றனர். இந்த அறிகுறி இருந்தால் நோயாளிகள் மூச்சு விட மிகவும் கஷ்டப்படுவார்கள்.
காது இரைச்சல் (Ear noise)
காதில் ஏதேனும் ஒலிக்கும் சத்தம் கேட்டால், கொரோனா அறிகுறிதான். தடுப்பூசி போட்ட பிறகு தொற்றால் பாதித்த பெரும்பாலானோருக்கு இந்த அறிகுறி இருக்கிறது.
வீக்கம் (Swelling)
தடுப்பூசி போட்ட மக்களுக்குப் பக்க விளைவாக கழுத்து, அக்குள் பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. இது ஒன்று அல்லது 2 நாட்களில் சரியாகி விடும். ஆனால், அந்த வீக்கம் தொடர்ந்தால் அது கொரோனா பாதித்ததற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
ஸ்புட்னிக் தயாரிக்க அனுமதி (Permission to produce Sputnik)
இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரித்து வழங்கி வரும் சீரம் நிறுவனம், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கவும், அதன் பரிசோதிப்புக்கு உட்படுத்தவும் அனுமதி அளிக்கும்படி மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது அனுமதி அளித்துள்ளது.
மேலும் படிக்க...
8 ஆசிய சிங்கங்களுக்கும் கொரோனா- தனி கூண்டில் தனிமைப்படுத்தப்பட்டன!
கொரோனா நோயாளிக்கு திருமணம் - கவச உடையில் தாலிக் கட்டிக்கொண்ட மணப்பெண்!