சிற்றகத்தி என்று அழைக்கப்படும் கருஞ்செம்பை ஒரு மூலிகை செடி ஆகும். குறு மரமாகும் கருஞ்செம்பையில் கருப்பு, சிவப்பு, மஞ்சள் என்று முன்று வகைகளில் பூக்கள் பூக்கின்றன. இந்த செடியானது அதிக அளவில் நீர் நிலைகளின் ஓரங்களில் வளர்ந்திருப்பதை காணமுடியும். சிறந்த கால்நடை தீவனமாகவும் இந்த கருஞ்செம்பை பயன்படுகிறது. இதன் மரத்தின் ஆயுட்காலமானது 10 வருடமே ஆகும். மரத்தின் பூக்கள் மற்றும் இலைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
பார்ப்பதற்கு முருங்கை இலை போன்று இருக்கு இந்த கருஞ்செம்பையை எவ்வாறு பயன்படுத்துவது. இதோ உங்களுக்காக சில செய் முறைகள்.
தேங்காய் எண்ணெயில் சிறிது சிற்றகத்தியின் பூக்களை சேர்த்து காய்ச்சி நாள்தோரும் தலைக்கு தேய்த்து வர ஒற்றை தலைவலி, தலைவலி நீங்கும்.
சிற்றகத்தியின் இலைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் சளி தொல்லை, சுவாச பிரச்சனை மற்றும் தலை வலி குணமாகும்.
உடலில் ஏற்பட்டுள்ள சொறி, சிரங்கு மற்றும் சருமத்தில் ஒவ்வாமை (Skin Allergy) போன்ற பிரச்சனைகளுக்கு சிற்றகத்தி இலைகள் மற்றும் குப்பைமேனி இலைகள் இரண்டையும் சம அளவு எடுத்து அத்துடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து சருமத்தில் தேய்த்து இரண்டு மணி நேரம் நன்கு ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 5 நாட்கள் செய்து வர விரைவில் பலனை காண்பீர்கள்.
சிற்றகத்தி பூக்களை சிறிது நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர சளி, சீதளம், தலைவலி, கழுத்து நரம்பு வலி, தலை பாரம் முதலியவை குணமாகும்.
தாய் பால் சுரப்பை சீரக வைக்க சிற்றகத்தியின் பூக்களை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு கொண்டு சாப்பிடலாம். இதனால் தாயின் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
சிறுநீர் கோளாறு இருப்பவர்கள் தினமும் கருஞ்செம்பு இலையை சாறு பிழிந்து குடித்து வர பிரச்சனை குணமாகும்.
சிற்றகத்தியின் மரப் பட்டைய அரைத்து தோல் நோய் ஏற்பட்டுள்ள இடங்களில் பத்து போட்டு வர விரைவில் நோய் குறையும்.
சிற்றகத்தி இலைகளை அரைத்து பின்னர் அதை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி உடலில் கட்டிகள் ஏற்பட்டுள்ள இடத்தில் கட்டு போட்டு வந்தால் அதுவே தானாக பழுத்து உடைந்து பின்னர் ஆறி விடும்.
அடிக்கடி மூக்கடைப்பு, தலையில் நீர் கோர்த்து கொள்ளவது போன்ற பிரச்சனைக்கு சிற்றகத்தியின் 10 இலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் இரு முறை தலைக்கு தேய்த்து குளித்தால் விரைவில் குணமாகிவிடும்.
தேள் கடி ஏற்பட்டால் உடனே சிற்றகத்தியின் மரப் பட்டையை நன்கு பசை போல் அரைத்து பத்து போட்டால் நஞ்சு முறிந்து வலி குறையும்.
மிளகு, சீரகம், கருஞ் சீரகம், பால் சாம்புராணி அனைத்தையும் தலா 5 கிராம் எடுத்து பசும் பால் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கருஞ்செம்பை இலைச் சாறு, பூண்டு சாறு தலா அரை லிட்டர் மற்றும் அத்துடன் நல்லெண்ணெய் ஒரு லிட்டர் சேர்த்து அடி கருகாமல் பதமுற காய்ச்சி எடுக்க வேண்டும். இதுவே கருஞ்செம்பை தைலம் தயாரிக்கும் முறை ஆகும். இதை தடவி வந்தால் தலை வலி, தலை நீர் ஏற்றம் குணமாகும்.
கருஞ்செம்பை பூ பத்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் சாம்புராணி சிறிதளவு சேர்த்து நல்லெண்ணெயில் பதமுற காய்ச்சி எடுத்து இளஞ் சூட்டில் தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தலை முடி நன்கு நீளமாக வளரும்.
K.Sakthipriya
krishi Jagran