Health & Lifestyle

Thursday, 01 August 2019 06:18 PM

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

உடல் எடையை குறைக்க நம்மில் சிலர் காலை உணவை தவிர்க்கின்றனர். காலை உணவை தவிர்ப்பதால் மெட்டபாலிச அளவு குறைந்து, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல், உடல் எடையைக் குறைப்பதே கஷ்டமாகிவிடும். கோபம், கவலை இருக்கும் சமயங்களில் மனதைக் கட்டுப்படுத்தி, அளவாகச் சாப்பிட வேண்டும். அல்லது கோபம் தணிந்த பிறகு சாப்பிடவும். சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும்  நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

மைதா, கிழங்கு, எண்ணெயில் பொரித்த உணவுகள், மா, பலா, வாழைப்பழம், இனிப்பு, உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். தயிர், சீஸ் அடிக்கடி சாப்பிடக் கூடாது.

சாப்பிட வேண்டிய உணவுகள்

சாப்பாடு சாப்பிடும்போது, நன்றாக மென்று விழுங்க வேண்டும். கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம். கைக்குத்தல் அரிசியில் உடலை வலுவாக்கும் சத்துக்கள் இருக்கின்றன. வாழைப்பூ, வாழைத்தண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை உண்பது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்லது. நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக மோர் குடிக்கவும். பால் அளவாக அருந்த வேண்டும். பழச்சாறு, காய்கறிகள், முளைகட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொள்ளு சூப், கொள்ளு துவையல், வறுத்த கொள்ளு, வேக வைத்த கொள்ளு போன்றவற்றை வாரம் மூன்று முறை எடுத்துக்கொள்ளவும்.

உணவுக்கட்டுப்பாடுடன் காலை வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து சாப்பிட்டுவர,  யோகா, நீராவிக் குளியல் ஆகியவை செய்வது உடல் எடை குறைய வழி வகுக்கும். வெந்தயத்தில் நார்சத்து இருப்பதால் அதீத பசி ஏற்படாமல் வயிற்றுக்கு தேவையானதை மட்டும் உட்கொள்ள உதவும். மற்றும் அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை குறைக்கும்.

K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)