மீண்டும் மீண்டும் சொறிவதால், தோலின் அடர்த்தியான பகுதியில் இரத்தம் கசியும் அல்லது தொற்று கூட ஏற்படலாம். எனவே, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதும் மற்றும் சருமத்தை உலர்த்தும் மற்றும் அரிப்பு ஏற்படுத்தும் தயாரிப்புகளைத் தவிர்ப்பது முக்கியம். இருப்பினும், இது நாள்பட்டதாக இருந்தால், காரணத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதற்கேற்ப சிகிச்சையளிப்பதற்கும் ஒரு நிபுணரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அரிப்பு ஒரு அடிப்படை பிரச்சினையின் விளைவாகவும் இருக்கலாம். ஹெல்த்லைன் படி, உடலில் அரிப்பு ஏற்படுத்தும் பல நிலைமைகள் உள்ளன, இது உடலின் எந்தப் பகுதியையும் பாதிக்கலாம்
தோல் அழற்சி (Dermatitis), சிரங்கு (Eczema), சொரியாசிஸ், படை நோய், அலர்ஜி போன்றவை தோலில் அரிப்பு ஏற்படுத்தும் சில பொதுவான நிலைமைகள்.
ஆயுர்வேத நிபுணர் டிம்பிள் ஜங்தா, தோல் அரிப்புக்கு சிகிச்சையளிக்க கூடிய சில மூலிகைகளைப் பகிர்ந்து கொண்டார்.
செங்கருங்காலி (Khadira)
இந்த ஆயுர்வேத மூலிகையானது டானின்கள், கேட்சு டானிக் அமிலம் மற்றும் கேடசின்கள் போன்ற செயலில் உள்ள பைட்டோ கெமிக்கல்களின் ஆற்றல் மையமாகும். அரிப்பு ஏற்படுத்தும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும்.
மஞ்சட்டி (Manjishtha)
இந்த மூலிகை ஆயுர்வேதத்தில் அதன் கட்டி எதிர்ப்பு, அஸ்ட்ரிஜென்ட் மற்றும் டையூரிடிக் பண்புகளுக்கு பெயர் பெற்றது. ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி வாய்ந்த மூலிகைகளில் ஒன்றாக கருதப்படும் மஞ்சட்டி, உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.
வேம்பு
இது ஆண்டிசெப்டிக், ஒட்டுண்ணி எதிர்ப்பு, அமைதியான மற்றும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது சின்னம்மை மற்றும் அரிக்கும் தோலழற்சியால் ஏற்படும் அரிப்பிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
தோல் அரிப்பு குளிர்காலத்தில் சருமம் வறட்சியடைவதால் ஏற்படும் மிகவும் பொதுவான சவால்களில் ஒன்று என்று கூறும் ஆயுர்வேத நிபுணர் விகாஸ் சாவ்லா, ஆயுர்வேதம் தோல் அரிப்பைக் கையாள்வதில் பயனுள்ள பல வீட்டு வைத்தியங்களை பரிந்துரைக்கிறது என்றார்.
தேங்காய் எண்ணெய் மிகவும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது வறண்ட சருமத்தால் ஏற்படும் அரிப்புகளைத் தடுக்கிறது. அதே நேரத்தில், பெப்பர்மிண்ட் எண்ணெய் ஒரு குளிர்ச்சியான தன்மையைக் கொண்டுள்ளது, இது நிவாரணம் அளிக்கிறது.
மேலும் படிக்க: