இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 14 November, 2021 5:06 PM IST

வாழைப்பழச் சிப்ஸ், வாழைப்பழ ஜூஸ், வாழைப்பழ சாலட் என இன்னும் பலவிதமான வாழைப்பழ அயிட்டங்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வாழைப்பழ டயட் (Banana Diet) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையெனில் தெரிந்துகொள்ளுங்கள்.

வாழைப்பழ டயட் (Banana Diet)

நமது உடல் எடை அதிகரித்து விட்டால், பார்பதற்கு குண்டாக மற்றவர்களுக்குக் கேளிக்கைப் பொருளாக மாறிவிடுவோம்.  நம்மில் பலர் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்தபோதிலும்,  எதுவும் செட் ஆகாமல் கவலை அடைவார்கள். அப்படிப்பட்டவரா நீங்கள்? உங்களுக்கு இந்த வாழைப்பழ டயட் நிச்சயம் உதவும்.

அதேநேரத்தில் தினசரி நாம் சாப்பிடும் உணவு நன்றாக ஜீரணம் ஆவதற்கும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கும் தான் வாழைப்பழம் சாப்பிட்டு வந்து இருப்போம். இந்தப் பிரதான உணவான வாழைப்பழத்தைக் கொண்டே நம் உடல் எடையையும் குறைக்க முடியும்.

​வாழைப்பழம் (Banana)

உண்மையில், தேவையற்ற கொழுப்புகள், நச்சுகள் உள்ளிட்டவை நம் உடலில் தங்கி விடுவதால்தானே வயிற்றில் தொப்பை மற்றும் உடல் பருமனால் அவதிப்படுகிறோம்.

இந்த டெக்னாலஜியை பயன்படுத்தியே வாழைப்பழத்தைப் பயன்படுத்தி, உடல் எடையை குறைக்கலாம். வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்குத் தேவையானது. அதிலும் குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதால், வாழைப்பழம் கொலஸ்ட்ரால் இல்லாத உணவும் கூட.

​​வாழைப்பழ டயட்

வாழைப்பழ டயட்டை 3-12 நாட்கள் வரை மேற்கொள்ளலாம். இதில் இந்த நீங்கள் சாப்பிடும் உணவுகளுடன் வாழைப்பழத்தை சேர்ப்பது அவசியம்.
இதில் வேண்டுமென்றால் கீரைகள், இளநீர் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மற்ற விட்டமின்கள், மினரல்களையும் நீங்கள் பெற முடியும்.

இதைத்தவிர்த்து காபி, சர்க்கரை, காரசாரமான உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.  நீங்கள் வெறும் வாழைப்பழம், கீரைகள் மற்றும் இளநீர் இவற்றைத் தான் எடுக்க வேண்டும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

எவ்வளவு நாள் (How many days)

1 நாள் அல்லது 1 வாரம் வரைக் கூட இந்த டயட்டை நீடிக்கலாம்.

உதாரணமாக வெள்ளிக்கிழமை தொடங்கினால் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த டயட்டை முடிவு செய்யலாம்.

அதே நேரத்தில் நாம் எப்பொழுதும் வாழைப்பழம் மட்டுமே சாப்பிட முடியாது. எனவே கீரைகள் போன்ற மற்ற உணவுகளையும் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளுங்கள்.

வருடத்திற்கு 1-2 முறை இந்த வாழைப்பழ டயட்டை பின்பற்றும் போது, உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதுடன், தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிறது.

இது உங்கள் உடலுக்கு மறுபுத்துணர்ச்சியை ஊட்டுகிறது.

பலன் தருமா? (Will it work?)

பொதுவாக உடல் எடை அதிகரிப்பை பெற்றவர்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு பிரச்சனைகள், இரத்த சர்க்கரை உயர்வு ஏற்படுகிறது. இவர்களுக்கு இந்த டயட் சிறந்ததாக இருக்கும்.

நன்மைகள் (Advantages)

இயற்கையான எடை இழப்பைப் பெற ஒரு வாழைப்பழத்தை கையில் எடுத்தால் போதும்.

  • வாழைப்பழத்தில் நார்ச்சத்துகள், வைட்டமின் பி மற்றும் மக்னீசியம் போன்ற பொருட்கள் உள்ளன.

  • பூஜ்ஜிய கொலஸ்ட்ரால் கொண்டு இருப்பதால் உங்க டயட்டிற்கு ஏற்ற ஒன்று.

  • இது பழுத்துவிட்டால் இதில் சர்க்கரை சத்தும் உள்ளது.

  • அதனால் உங்க உடம்பிற்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.

  • உடம்பில் உள்ள தேவையற்ற நச்சுக்களை கொழுப்புகளை நீக்குகிறது. வெகு விரைவில் உடம்பை பழைய நிலைக்குக் கொண்டு வருகிறது.

  • இது ஒரு இயற்கையான எடை இழப்பைக் கொடுக்கிறது.

  • உடம்பிற்குத் தேவையான ஆற்றலையும் மூளைக்குத் தேவையான தெளிவான சிந்தனையையும் தருகிறது.

  • உங்களுடைய உடற்பயிற்சி திறன் மற்றும் விளையாட்டு திறனையும் அதிகரிக்கிறது.

  • வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம், நம் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

  • இதிலுள்ள நார்ச்சத்துகள் ஜீரணச் சக்தியை மேம்படுத்தி மலம் வெளியேறுதலை சுலபமாக்குகிறது.

  • வாழைப்பழத்தில் பிரக்டூலிகோசாக்கரைடுகள் என்ற தனித்துவமான கார்போஹைட்ரேட் காணப்படுகிறது.

  • இது குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களை பராமரிக்க உதவி செய்கிறது.

உண்மை அல்ல (Not true)

வாழைப்பழத்தில் சர்க்கரை சத்து அதிகம். அதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மை அல்ல.

பொதுவாக ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, பிறகு ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டால், உடற்பயிற்சியினால் எரிக்கப்பட்ட கலோரிகள் எல்லாம் வந்துவிடும் என்று கூறுவார்கள். இதுவும் உண்மையல்ல.

மேலும் படிக்க...

தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் - மக்களே உஷார்!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

English Summary: Banana Diet To Lose Weight Naturally!
Published on: 14 November 2021, 05:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now