மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 December, 2020 8:40 AM IST
Credit : Vikatan

சுகாதாரம் என்பது நம்முடைய ஒவ்வொரு செயல்களின்போதும், கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. ஆக தனிமனித செயல்களில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

எனினும் சென்னை போன்ற பெருநகரங்களில் (Metro Politan cities) நாளுக்கு நாள் பெருகிவரும் தள்ளுவண்டிக் கடைகள், தினக்கூலிகளுக்கு உணவளிக்கும் அட்சயப்பாத்திரமாகத் திகழ்கின்றன.

இந்தக் கடைகளில், பிளாஸ்டிக் பேப்பரில் (Plastic Papper) உணவு பரிமாறுதல், பிளாஸ்டிக் பேப்பரில் இட்லி ஊற்றுதல் போன்ற விதிமீறல்கள் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

அவ்வாறு வழங்கப்படும் உணவை சாப்பிடுவதால், பல்வேறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாடிக்கையாளர்களின் நலன்கருதி சிலக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  (Food Department) விடுத்துள்ளது.

இதன்படி

  • குப்பை தொட்டிகள் அருகே தள்ளுவண்டிக் கடைகள் இருக்கக்கூடாது.

  • சாப்பிட வாழை இலைதான் பயன்படுத்த வேண்டும்.

  • ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை சூடுபடுத்தி மறுமுறை பயன்படுத்த கூடாது

  •  பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தாமல் வாழை இலைதான் பயன்படுத்தவேண்டும்.

  • கடைகளில் பணிபுரிவோர் கட்டாயம் முக கவசம், கையுறை அணியவேண்டும்.

  • சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்த வேண்டும்.

  • சாலையோரங்களில் குப்பைத்தொட்டி, கழிவறை, திறந்த சாக்கடை அருகில் கடை வைக்கவே கூடாது.

  • பிளாஸ்டிக் கவரில் உணவுகள் வினியோகிக்கப்படுவது கூடாது.

  • சூடான உணவுகள் பிளாஸ்டிக் கவரில் வைக்கப்படும்போது, அது நச்சுத்தன்மை அடைகிறது.

  • எனவே கண்டிப்பாக வாழை இலைதான் பயன்படுத்த வேண்டும்.

  • வியாபாரிகள் பணியின்போது பாக்கு, வெற்றிலை, புகையிலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

  • சிக்கன், மட்டன் துண்டுகளை வண்டியில் கவர்ச்சிக்காக தொங்கவிடக்கூடாது.

தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வியாபாரிகளுக்கு இந்த எச்சரிக்கைகளை விடுத்தனர்.

மேலும் படிக்க...

அன்னாசி பழத்தை தினமும் சாப்பிடலாமா?

சுரைக்காய் ஜூஸை அதிகமாகப் பருகினால் மரணமும் நிகழலாம்-எச்சரிக்கை!

Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!

English Summary: Banana leaves should be used in trolley shops - Food Safety Warning!
Published on: 28 December 2020, 08:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now