இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 April, 2019 12:41 PM IST

ஆரோக்கியமான வாழ்க்கையை நீடித்துக்கொள்வது என்பது அவர் அவர் மேற்கொள்ளும் செயல்களை கொண்டே இருக்கிறது.மற்றும் இதனை ஒப்பிடும் போது நிறைய வேறுபாடுகள் கொண்டதாகும். மேலும். ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நோயற்ற வாழ்வு, உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பு. மேலும் இது நபருக்கு நபர் வேறுபடுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை நீடிக்க சிறந்த உணவு, உடற்பயிற்சி, மற்றும் உடல் கவனிப்பு மிக முக்கியமானதாகும். 

உங்களுக்காக  ஆரோக்கியமான வாழ்க்கையை நீடிக்க சில எளிய முறையில் ஹெல்த்தி டிப்ஸ் :

1.தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முடிந்த அளவு 2 ல் இருந்து 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லதாகும்.

2.காலை, மாலை என இரு நேரமும் ஒரு மணி நேரமாவது நடை பயிற்ச்சி (வாக்கிங்) மேற்கொள்ள வேண்டும். இதனால் உங்கள்  உடல் உறுப்புகளில் நல்ல செயல்பாடு ஏற்பட்டு நரம்புகளுக்கும், சதைகளுக்கு பலம் கிடைக்கும்.

3.நேரத்திற்கு சாப்பாடு உணவு உட்கொள்ளவது. ஒரு நாளில் நாம் மூன்று வேலை சாப்பிடுகிறோம் இதில் காலை 9- 9:30 மணிக்குள் சாப்பிட வேண்டும். மதியம் 1:30 - 2  மணிக்குள் சாப்பிட  வேண்டும். மற்றும் இரவு 7-7:30 மணிக்குள் சாப்பிடும் பழக்கத்தை  ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

4.அளவான சாப்பாடு. நாம் தினமும்  சாப்பிடும் உணவில் அளவான சாப்பாடு இருந்தால் மிகவும் நல்லது. அல்லது காலை, மாலை நன்றாக சாப்பிட்டால் இரவு உணவில் குறைந்த அளவு சாப்பாடு   இருந்தால்  செரிமானம் சீராக  ஏற்படும்.

5.உடற்பயிற்சி , தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகளுக்கு நல்ல செயல்பாடு  ஏற்பட்டு மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு நல்ல ஆரோகியம் கூடும்.

6.நனமது தினசரி வேலையை நேரத்திற்கு செய்வது. ஒரு நாளைக்கு நாம் செய்யும் வேலையை நாம் மற்ற நாளிலும் அதே நேரத்திற்கு செய்ய வேண்டும்.

7.கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்த உணவை  உட்கொள்வதால் தேவையற்ற கொழுப்பு நம் உடம்பில் ஏற்படுகின்றது. இதனால் உடல் பருமனாகி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.  முடிந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்லதாகும்

8.நாம் உட்கொள்ளும் உணவில் காயிகரிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பயிர்கள் சாப்பிடுவது நல்லது அதிலும் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அசைவ உணவை இரவில் தவிர்ப்பது உடல் செரிமானத்திற்கு நல்லது.

9.நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் முடிந்த அளவு மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு  ஒரு முறை உடலை பரிசோதித்துக்கொள்வது மிகவும்  நல்லது.

நேரம் நம்மை தேடி வராது, நாம் தான் நமக்காக நேரத்தை எடுத்துக்கொள்ள  வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்த டிப்ஸ் மிகவும் பயன் அளிக்கும்.

English Summary: Basic tips to lead a healthy lifestyle
Published on: 29 April 2019, 12:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now