Health & Lifestyle

Wednesday, 05 January 2022 04:40 PM , by: R. Balakrishnan

Healthy foods also dangerous

தவறான நேரத்தில் அல்லது தவறான வழியில் உட்கொள்ளப்படும் மருந்துகள் உடலுக்கு விஷம் போல் செயல்படுகின்றன. இது ஆரோக்கியமான உணவுக்கும் பொருந்தும். நாம் அறியாமல் தவறான நேரத்தில் ஆரோக்கியமான உணவையே உட்கொண்டாலும், அது நம் உடலுக்கு தீங்கையே விளைவிக்கும்.

பழச்சாறு (Fruit Juice)

பழச்சாறு (Fruit Juice) உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள், பழச்சாறுகளை தொடர்ந்து உட்கொண்டால், அவர்களது உடலில் சோம்பல் அதிகரிக்கும். உடல் பருமனும் அதிகரிக்கக்கூடும். பழச்சாறுகளில் ஃபைபரும் அதிகபட்ச அளவு சர்க்கரையும் உள்ளது. இதனால் உங்கள் செரிமானத்தின் வேகம் குறையலாம். இதனால் உங்களுக்கு அமிலத்தன்மை பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

சில பால் பொருட்கள்: (Some Milk Products)

அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை கொண்டவர்கள் அதிக பால் பொருட்களைப் (Dairy Products) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவற்றை தயாரிப்பதில், முழு கிரீம் பயன்படுத்தப்படுகிறது. இது கொழுப்பை அதிகரிப்பதோடு, உடலில் சர்க்கரையின் அளவையும் அதிகரிக்கிறது.

வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்புகள்: (Home made Sweets)

பெரும்பாலான மக்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து எந்த இனிப்புகளையும் (Sweets) ஆர்டர் செய்யாமல், வீட்டிலேயே இவற்றை செய்து அவற்றை உட்கொள்கின்றனர். இது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால், இவற்றின் அதிகப்படியான நுகர்வு ஆரோக்கியத்தை கெடுக்கும்.

பொரித்த உணவு:

இந்த தொற்று காலத்தில், பெரும்பாலும் மக்கள் வெளியே அதிகமாக சாப்பிடுவது இல்லை. ஆனால், வீட்டில் செய்யும் பிரட் பக்கோடா, சீலா, பூரி, பிரெஞ்ச் பிரைஸ் போன்ற உணவுகளை யாருக்குத்தான் பிடிக்காது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். ஏனெனில், இவை உங்களை நோய்வாய்ப்பட வைக்கும்.

மேலும் படிக்க

இந்தக் கீரையை சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் கல்லீரல் பிரச்சனையே வராது!

சர்க்கரை வியாதி வராமல் தடுக்க எளிய வழி எது?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)