Health & Lifestyle

Sunday, 03 July 2022 08:24 AM , by: R. Balakrishnan

Beautiful hairstyle to cover hair loss

கூந்தல் உதிர்வு என்பது தற்போது பலருக்கும் இயல்பான பிரச்னையாக உள்ளது. டீனேஜ் பருவத்தினர் கூட கூந்தல் உதிர்வால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஊட்டச்சத்தில்லா உணவு, போதிய பராமரிப்பின்மை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட காரணங்களால் கூந்தல் உதிர்வு பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க சிகிச்சை முறைகளை பின்பற்றுவது ஒருபக்கம் இருந்தாலும், தற்போதுள்ள உங்களின் அரையடி கூந்தலை அடர்த்தியாக காட்டும் மேஜிக்கல் வழிமுறைகள் இதோ.

அழகிய ஹேர்ஸ்டைல் (Beautiful Hairstyle)

சிறிதளவு கூந்தலை முன்பக்கமாக வெட்டி விடும்போது, உங்களின் நெற்றியை மறைத்தவாறு முன்பக்கமாக இருக்கும். இது உங்களுக்கு ஸ்டைலிஷான தோற்றத்தை தருவதுடன், உங்களின் வயதையும் குறைத்துக்காட்டும்.

லேயர் ஹேர்கட் முறை உங்களின் கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். கூந்தலை லேயர் கட் செய்து ப்ரீயாக விட்டுவிட வேண்டும்; அதில் பாதி கூந்தலை மட்டும் முன்புறம் தோளில் படருமாறு எப்போதும் பார்த்துக்கொள்ள வேண்டும். இது உங்களை இளமையாகவும், மிகவும் உற்சாகமாக இருப்பது போன்ற ஸ்டைலிஷான தோற்றத்தில் காட்ட உதவுகிறது.

ஒரு சிலர் நெற்றியை ஒட்டி கூந்தலை வெட்டிவிட தயங்குவர். எனவே, உங்கள் கூந்தல் நிறத்துக்கேற்ப லிப்ஸ்டிக்கை சிறிதளவு நெற்றிப்பகுதியில் மெலிதாக தேய்க்கலாம். அப்போது கூந்தல் அடர்த்தியாக இருப்பது போன்ற ஒரு மாயையை அது உருவாக்கும்.
இல்லாவிட்டால் காஜல் பயன்படுத்தி நெற்றி கூந்தலை ஒட்டியவாறு சிறிது கோடுகளை வரையலாம். கூந்தலின் நிறத்துக்கேற்ப கோட்டின் நிறமும் இருக்க வேண்டும். அப்போதுதான் கூந்தலை பார்க்கும் போது எளிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

சாதாரண சீப்புகளுக்கு பதிலாக கூந்தலை வார ஹேர் பிரஷ் பயன்படுத்தலாம். இதனால் கூந்தல் மென்மையாக இருப்பதுடன், அடர்த்தியாக இருப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.

மேலும் படிக்க

கர்ப்பப்பை வாய் கேன்சர்: மகளிரை பாதுகாக்க தடுப்பூசி!

நெயில் பாலிஷ்: இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)