Health & Lifestyle

Thursday, 31 January 2019 06:03 PM

காலையில் செய்கின்ற ஒரு சில விஷயங்கள் தான் நம்மை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்து கொள்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை நேரத்தில் நாம் செய்ய கூடிய சில அன்றாட செயல்கள் நம்மை முழுவதுமாக மாற்ற கூடிய தன்மை வாய்ந்தவை. அதுவும் இந்த பழக்க வழங்கங்கள் அனைத்துமே உங்களின் முகத்தை பளபளவென மாற்ற கூடியவையாம். இவற்றை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு கிடைக்க கூடிய பலன்கள் ஏராளம்.

முதல் வேளை

 காலையில் எழுந்தததும் மொபைல் எங்குள்ளது என தேடாமல், 1 கிளாஸ் தண்ணீரை குடியுங்கள். உங்களின் நாளை இப்படி தொடங்கினால் மனதிற்கும் உடலிற்கும் அதிக ஆற்றல் கிடைக்கும். சீனர்கள் கூட இந்த பழக்கத்தை கடைபிடிப்பதால் தான் இவ்வளவு ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.

வைட்டமின் பி

 தென்னிந்திய பாரம்பரிய உணவான இட்லி போன்றவற்றை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அத்துடன் வைட்டமின் பி நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டால் உங்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் முக ஆரோக்கியம் கூடும்.

மசாஜ்

தினமும் 2 நிமிடம் கையை வைத்து முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் கொடுங்கள். இது முகத்தில் சீரான ரத்த ஓட்டத்தை தந்து பளபளவென மாற்றும். மேலும், ஐஸ் கட்டிகளை வைத்தும் முகத்தில் ஒத்தடம் கொடுத்தால் நல்ல பலன் விரைவிலே கிடைக்கும்.

வீங்கிய கண்களா?

கண்கள் அதிக வீக்கத்துடன் காலையில் இருந்தால் அதற்கும் தீர்வு உள்ளது. டீ பேக்குகளை (tea bags) குளிர வைத்த பின்னர் கண் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். இது கண்களின் வீக்கத்தை குறைத்து அதன் அழுத்தத்தையும் குறைத்து விடும்.

பன்னீர்  

முகத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்து கொள்ள பன்னீரை கொஞ்சம் பஞ்சில் ஊற்றி கொண்டு முகத்தில் தடவலாம். இந்த குறிப்பு உங்களின் வறட்சியான முகத்தை ஈர்ப்பதுடன் வைத்து கொள்ள உதவும். அத்துடன் மினுமினுப்பான சருமமும் உங்களுக்கு கிடைக்கும்.

காலை உணவு முக்கியம்

நாம் சாப்பிட கூடிய உணவு வேளையில் காலை உணவு மிகவும் அவசியமானது. காலையில் சாப்பிடாமல் இருந்தால் அன்றைய நாள் முழுவதும் பலவித பாதிப்புகளை உங்களுக்கு தரும். இதே பழக்கம் தொடர்ந்தால் உடல் நிலை முழுவதுமாக சீர்கேடு அடைந்து விடும்.

நோ நோ.

முகத்தை அழகாக்க வேண்டும் என்பதற்காக கண்ட கிரீம்களையும் முகத்தில் பயன்படுத்தாதீர்கள். இது முகத்தின் அழகை கெடுத்து கருமையை தந்து விடும். கூடுதலாக அலர்ஜி போன்ற பாதிப்புகளும் உங்களுக்கு பரிசாக கிடைக்கும். ஆதலால் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)