எத்தனை இலைகள் நம் அருகே இருந்தாலும், இதன் நறுமணம் நம்மைச் சுண்டி இழுக்கும். அதுதான் புதினா.உணவின் நறுமணத்திற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் அடித்தளம் அமைத்துத் தருவதில் புதினா முக்கிய இடம் வகிக்கிறது.
இரும்பு, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் சத்துகள் இதில் அதிகம் இருப்பதால் இரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரிக்கிறது. மூளை செயல்பாட்டையும் தூண்டிவிடுகிறது.
சத்துக்கள் (Nutrients)
மிகவும் குறைவானக் கலோரிகளை கொண்டுள்ள புதினாவில் மிகவும் குறைவான அளவு புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. இதில் விட்டமின்கள் ஏ,சி, மற்றும் பி காம்ப்ளக்ஸ் உள்ளது. இது சருமத்திற்குப் பொலிவைத் தருவதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது.
செரிமானம் (Digestion)
உணவு செரிமானத்தைத் தூண்டும் இந்த புதினாவை வாயில் போட்டு மென்று வந்தால் வயிறு உப்புதல் மற்றும் வாயு பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.
பல் வலி (Tooth ache)
புதினாவில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் விளைவுகளைக் கொண்டுள்ளன, அவை வயிற்று வலியைக் குறைப்பதோடு அமிலத்தன்மையை சீராக்குகிறது.
இதில் இடம்பெற்றுள்ள எண்ணெய்ச் சத்துக்கள் பல்வலியில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.
ஆஸ்துமா (Asthma)
தொடர்ந்து புதினாவை எடுத்துக்கொள்வது மார்பு சளி மற்றும் நெஞ்சு எரிச்சலைக் குறைக்கும். புதினாவில் உள்ள மெத்தனால் ஒரு இரத்தக் கொதிப்பு நீக்கியாக செயல்பட்டு, நுரையீரலில் சேகரிக்கப்பட்ட சளியை தளர்த்த உதவுகிறது. மேலும் மூக்கில் உள்ள வீங்கிய சவ்வுகளை சுருங்கச் செய்து, நம்மை எளிதாக சுவாசிக்க அனுமதிக்கிறது.
அதேநேரத்தில் புதினாவை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, சுவாசப் பாதையில் எரிச்சலை ஏற்படுத்தும்.
தலைவலி (Head ache)
புதினாச் சாற்றை உங்கள் நெற்றியில் தடவினால் தலைவலி விரைவில் குணமாகும். இது புத்துணர்ச்சியூட்டும் வாசனையைக் கொண்டிருப்பதால், மன அழுத்தத்தைக் குறைக்கும்.
சரும ஆரோக்கியம் (Skin health)
புதினாவில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், சருமத்தில் உள்ள முகப்பருக்களை குறைக்க உதவும். இது தோல் சுத்தப்படுத்தியாகவும் செயல்படுகிறது.
வாய் பராமரிப்பு (Oral care)
புதினா இலைகளை மென்று சாப்பிடுவது வாய் சுகாதாரம் மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழியாகும். புதினாவில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் புத்துணர்ச்சி சுவாசத்தைப் பெற உதவும்.
ஞாபக சக்தி (memory power)
மூளையின் செயலாற்றலை புதினா மேம்படுத்துவதுடன், நினைவாற்றலைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
உடல் எடை குறைப்பு (Weight loss)
புதினாவில் இருக்கும் அத்தியாவசியமான எண்ணெய்கள் பித்த ஓட்டத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சும் போது வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் எடை குறைப்பும் சீராக நடைபெறுகிறது.
தகவல்
மருத்துவர் சௌரப் அரோரா
மேலும் படிக்க...