Health & Lifestyle

Sunday, 22 May 2022 05:59 PM , by: R. Balakrishnan

Benefits of drinking rice porridge

பொதுவாக வீட்டில் சோறு வடித்த கஞ்சியை வீணாக கீழே ஊற்றி விடுகிறோம். ஆனால் அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது என யாருக்கும் தெரிவதில்லை.

சாதம் வடித்த கஞ்சி

சோறு வேக வைத்த அந்த கஞ்சியை அன்றாடம் உப்பு, மற்றும் மிளகு போட்டு குடித்து வர உடல் எடை 150 கலோரிகள் குறைந்து கட்டுக்குள் இருக்குமாம். மேலும், வயிற்றுப் போக்கு இப்படி மற்ற உடல் உபாதைகளுக்கும் உதவும். அதோடு மலச்சிக்கல், வைரஸ் தொற்று போன்றவற்றையும் குணமாக்க உதவுகிறது.

உடல் சுருசுருப்பாக இயங்கவும் உதவுகிறது. சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். இவை கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும்.

அடுத்ததாக, கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மேலும், சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். எனவே சாதம் வடித்த கஞ்சியை முடிந்த அளவு வாரத்தில் 4 நாட்களாவது பருகி வாருங்கள்.

மேலும் படிக்க 

நீரிழிவு நோயாளிகளின் மாமருந்து வேப்பம்பூ: சேகரித்து பயன்பெறுங்கள்!

எலித் தொல்லை தாங்க முடியலையா? இதை செஞ்சிப் பாருங்க எலியே வராது

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)