இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 September, 2018 3:44 AM IST
Health benefits of drinking water.

தண்ணீர் மிகவும் சிறப்பான பானமாகும். தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்.  பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில்தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.

குடல் சுத்தமாகும்

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானது முற்றிலும் வெளியேறிவிடும்.


நச்சுக்களை வெளியேற்றிவிடும்

 தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின்றி சுத்தமாக இருக்கும்.

 

பசியைத் தூண்டும்

 தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

தலைவலியை தடுக்கும்

பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும்.

அல்சரைத் தடுக்கும்

காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.


மெட்டபாலிசம் அதிகரிக்கும்

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும்.

 

 

 

 

இரத்த செல்கள் உற்பத்தியாகும்

 வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரிக்கும். இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.


எடையை குறைக்க உதவும்

எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

பொலிவான சருமத்தைக் கொடுக்கும்

குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்

உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தண்ணீர். இத்தகைய தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவடைந்து, நோய்கள் உடலை தாக்காதவாறு பாதுகாக்கும்.

சோர்வு

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

 

இதயத்திற்கு நல்லது

 தண்ணீரை வெறும் வயிற்றில் அதிகாலையில் குடித்து வந்தால், இதயத்தில் இரத்த அழுத்தம் சீராக இருந்து, இதய நோயிலிருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.

 

உறுப்புகளுக்கு நல்லது

 காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உடலின் மிக முக்கிய உறுப்புகள் ஈரப்பதமூட்டப்பட்டு, அவற்றின் இயக்கம் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

English Summary: Benefits of drinking water on an empty stomach
Published on: 18 September 2018, 09:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now