Warm water bath with salt
பொதுவாக நாம் உப்பை சமையலில் சேர்த்து கொள்வது வழக்கம். ஆனால் நாம் குளிக்கும் தண்ணீரில் உப்பைக் கலந்து குளிப்பதால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். பொதுவாக கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப தயாரிக்கப்படுவதால் இதில் தாதுக்கள் மிக குறைவு. ஆனால் நாம் குளிப்பதற்கு என்றே தனி உப்பு உள்ளது. அதனை நாம் பயன்படுத்தி வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். உப்பை தண்ணீரில் கலந்து குளிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
தண்ணீரில் உப்பு கலப்பு (Hot Water-Salt Mixing)
குளிக்கும் தண்ணீரில் நீங்கள் உப்பை நான்கு முதல் பத்து கப் வரை சேர்க்கலாம். சாதாரண நீர்த்தொட்டியில் கால் கப் கடல் உப்பு சேர்க்கலாம். குறைந்தது இந்த உப்பு 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வேண்டும்.
நீங்கள் குளிக்கும் இந்த தண்ணீரானது உங்கள் உடலின் வெப்பநிலையிலிருந்து இரண்டு டிகிரி அதிகமான வெப்பநிலையில் இருக்க வேண்டும்.
- இப்படி நீங்கள் குளித்து வந்தால் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.
- அதோடு தசைகள் இலகுவாகி உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
- மேலும் உடல் வலி, தசை வலி இருந்தாலும் சரியாகும். உடல் அசதி போன்றவை இருக்கும் நேரத்தில் இந்த கடல் உப்பு குளியல் நல்ல பலனை தரும்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் (Who Should Avoid)
- சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற ஏதாவது பிரச்னை வந்தால் தவிர்த்து விடுங்கள்.
- அதேபோல் உடலில் காயம், சிரங்கு, பரு , தேமல் போன்ற சரும பாதிப்புகள் இருந்தால் தவிர்க்க வேண்டும்.
- மேலும் இந்த குளியலை நீங்கள் செய்யும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
மேலும் படிக்க
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆப்பிளை எப்பொழுது சாப்பிட வேண்டும்!