Health & Lifestyle

Saturday, 04 September 2021 12:26 PM , by: Aruljothe Alagar

Benefits of using cloves on the face! Remedy for wrinkles on the face!

கிராம்பு உணவிற்கும் சருமத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது தான் நாம் அறிந்தது,ஆனால் கிராம்பு சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். சருமத்தில் கிராம்புகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன அத்தகைய சூழ்நிலையில், முகத்தில் கிராம்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை அகற்ற கிராம்பை கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல பயன்படுத்துங்கள்.

கிராம்பு சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது?

கிராம்புகளைப் நமது சருமத்தில் பயன்படுத்துவதால் கொலாஜன் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். முகத்தில் கிராம்புகளைப் பயன்படுத்தினால் பூஞ்சை தொற்றுக்களைத் தடுக்கலாம். மேலும் இது உங்கள் முகத்தில் உள்ள பாக்டீரியாவை அகற்ற உதவுகிறது. கிராம்பில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன, இது பல தோல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

சுருக்கங்களுக்கு கிராம்பை எப்படி பயன்படுத்துவது

சுருக்கங்களை குறைக்க நீங்கள் கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்தலாம். உங்கள் உள்ளங்கையில் சில துளிகள் கிராம்பு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இரண்டு எண்ணெய்களையும் உள்ளங்கையில் நன்கு கலக்கவும். இப்போது உங்கள் முகத்தை லேசாக கைகளால் மசாஜ் செய்யவும். அதன் பிறகு ஒரு இரவு விட்டு விடுங்கள்.

இது தவிர, ரோஜா நீரில் இரண்டு முதல் மூன்று கிராம்புகளை அரைத்து நேரடியாக தோலில் தடவலாம். இது உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும். மேலும் இது உங்கள் சருமத்தை மென்மையாக்கும்.

இது தவிர, கிராம்புப் பொடியை முல்தானி மிட்டியுடன்  சேர்த்து முகத்தில் தடவலாம். இது பல தோல் பிரச்சனைகளை நீக்கும்.

மேலும் படிக்க...

இது போன்ற எண்ணெய் சருமத்தை இவ்வாறு கவனித்துக் கொள்ளுங்கள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)