இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 8 April, 2022 8:07 AM IST

உடல் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள புல் ஜூஸ் நிச்சயம் கைகொடுக்கும் என்ற அண்மைகாலமாக அறிவுறுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் தெருவுக்கு தெரு புல் ஜூஸ் விற்பனைக்காகக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது. அவ்வாறு விரும்பி அருந்தப்படும், கோதுமைப் புல் ஜூஸை அதிகமாக உட்கொண்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

கோதுமை புல் சாறு பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. டிரிடிகம் ஈஸ்டிவம் என்ற தாவரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கோதுமை புல் பல வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. பொதுவாக மக்கள் இதை ஜூஸ் வடிவில் குடிப்பார்கள், ஆனால் இது தூள் வடிவத்திலும் கிடைக்கிறது. இதை தினமும் உட்கொள்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறுவோம். இது ஒரு ஹெல்த் டானிக் போல் செயல்படுகிறது. இதன் நுகர்வு உங்களுக்கு பல வகையான நோய்களுக்கு நிவாரணம் தரும், ஆனால் தினமும் அதிகமாக இதை உட்கொண்டால் பின்வரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

நீங்கள் முதன்முறையாக கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பவராக இருந்தால், ஒரு சிறிய அளவுடன் ஆரம்பித்து படிப்படியாக அதிகரிக்கவும். இது செரிமானத்தை சரிசெய்ய உடலுக்கு உதவும். ஒரு நல்ல சப்ளையர் ஆகும். அதேநேரத்தில் 
கோதுமை புல் ஜூஸ் மற்றும் தூள் வடிவிலும் கிடைக்கிறது. ஜூஸ் அளவு 1 அவுன்ஸ் ஆக இருக்க வேண்டும். அதேசமயம் தூள் அளவு 1 தேக்கரண்டி அல்லது 3 முதல் 5 கிராம் வரை இருக்க வேண்டும். கோதுமை புல் ஜூஸ் குடித்த அல்லது சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது அதன் பக்க விளைவுகளை குறைக்க உதவுகிறது.

பக்க விளைவுகள்

  • தலைவலி

  • வயிற்றுக்கோளாறு

  • காய்ச்சல்

  • சோம்பேறியாக இருப்பது

  • மலச்சிக்கல்

இருப்பினும், இந்த பக்க விளைவுகள் அனைத்தும் பொதுவாக இரண்டு முதல் இரண்டரை வாரங்களில் மறைந்துவிடும். உடல் கோதுமைப் புல்லை ஜீரணிக்கத் தொடங்கும் போது, ​​இந்த அறிகுறிகளை நீங்கள் காண மாட்டீர்கள். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் கோதுமை புல் ஜூஸ் எடுத்துக்கொள்ளக்கூடாது.

மேலும் படிக்க...

கொளுத்தும் வெயிலில் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாதா?

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

English Summary: Beware of health if you drink too much of this juice!
Published on: 08 April 2022, 08:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now