மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 May, 2021 2:57 PM IST
SBi

 நாட்டில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State bank of India ) தனது வாடிக்கையாளர்களுக்காக தொடர்பற்ற சேவையை  (Contactless Service) அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது பயனர்கள் வீட்டில் இருந்தபடி தொலைபேசியின் மூலமாகவே வங்கி தொடர்பான பல பணிகளை செய்து முடிக்க முடியும். 

SBI இது குறித்த விவரங்களை தனது ட்வீட்டில் வெளியிட்டுள்ளது. SBI தனது ட்வீட்டில், "வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் உங்களுக்கு சேவை செய்ய இங்கு இருக்கிறோம். உங்களுடைய உடனடி வங்கி தேவைகளை பூர்த்தி செய்ய உங்களுக்கு உதவ, SBI உங்களுக்கு தொடர்பற்ற சேவையை வழங்குகிறது. எங்கள் கட்டணமில்லா எண்ணான 1800 112 211 அல்லது 1800 425 3800- ல்  அழைக்கவும்." என எழுதியுள்ளது. 

SBI-யின் இந்த சேவைகளை இப்போது நீங்கள் தொலைபேசியில் பெறலாம்.

இந்த எண்களை அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த சேவைகளைப் பெற முடியும் என்பதை விவரிக்கும் வீடியோவை SBI தனது ட்வீட்டில் இணைத்துள்ளது. வீடியோவின் படி, வாடிக்கையாளர்கள் இந்த கட்டணமில்லா எண்களை கணக்கு இருப்பு மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகள், ATM வசதியைப் பெறுவது அல்லது நிறுத்துவது, ATM பின் அல்லது கிரீன் பின்னை உருவாக்குவது, புதிய ATM கார்டுக்கு விண்ணப்பிப்பது ஆகிய பணிகளுக்கு வாடிக்கையாளர்கள் இந்த கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

முன்னதாக, SBI தனது வாடிக்கையாளர்களிடம் ஒருபோதும் கியூஆர் குறியீட்டை ( QR Code) ஸ்கேன் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தது. இது செய்யப்படாவிட்டால், மக்கள் ஆன்லைன் மோசடிக்கு ஆளாவதை அதிக அளவில் தடுக்கலாம் என்றும் SBI அறிவுறுத்தியுள்ளது. 

SBI ட்வீட் செய்தது, "நீங்கள் ஒரு கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதால் உங்களுக்கு பணம் கிடைக்காது. உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை டெபிட் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை மட்டுமே பெறுவீர்கள்.

பணம் செலுத்துவதற்கான குறிக்கோள் இல்லாதவரை, மற்றவர் பகிரும் #QRCodes-ஐ ஸ்கேன் செய்யாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள்” என்று SBI ட்வீட் செய்துள்ளது.

மேலும் படிக்க..

மாதம் ரூ. 1000 முதலீட்டில் ரூ. 1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்

SBI PPF சுப்பர் ஸ்கீம் : மாதத்திற்கு ரூ .9,000 முதலீடு… இத்தனை ஆண்டுகளில் ரூ .28 லட்சம் ரிட்டன் !

ATM கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கும் வசதி- அறிமுகப்படுத்தியது SBI!

English Summary: Big help from SBI: You can complete all these tasks on one phone call
Published on: 08 May 2021, 02:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now