இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 30 December, 2022 4:29 PM IST
Black Peeper..

கருப்பு மிளகு நமது  சமையலறையில் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றாகும். சில உணவுகளில் மிளகு அப்படியே சேர்த்து மற்றவற்றில் தூள் போடுவதன் மூலம் உணவின் சுவையை அதிகரிக்கிறோம். உணவில் சுவையைச் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், மிளகு பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

ஆயுர்வேதத்தில் மிளகு ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இடுகையில் கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி மேலும் அறியலாம்.

இருமல்  சளி மற்றும் மூக்கு ஒழுகுவதற்கான தீர்வு

இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு ஆகியவற்றை இஞ்சி சாறுடன் (இஞ்சி) எடுத்துக் கொன்டாள் . இதை தேநீரில் கலந்து சாப்பிடலாம்.

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது

ஒரு ஆய்வின்படி, கருப்பு மிளகு புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஏனெனில் இதில் பைபரின் (fiber) என்ற ரசாயனம் உதவுகிறது . மஞ்சளுடன் இதை உட்கொள்வது புற்றுநோயைத் தடுக்கும். இது பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது.

வலி நிவாரணம்

கருப்பு மிளகில் உள்ள பைபரின் அளவு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது தசைகளில் ஏற்படும் வலியை தடுக்கிறது. இது மசாஜ் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மிளகை எண்ணெயுடன் கலந்து சூடு படுத்தி, வலி இருக்கும் பகுதிகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் பெறலாம்.

வயிற்றுக்கு நல்லது

கருப்பு மிளகு உட்கொள்வது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உருவாக்குகிறது. இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. இது வயிற்று வலி வாயு மற்றும் மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளையும் நீக்குகிறது.

முகமும் பளபளக்கிறது

இதைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்படலாம், ஆனால், அது உண்மைதான்! கருப்பு மிளகை வைத்து ஸ்க்ரப்பிங் (scrubbing)  செய்தால் , முகத்தில் பிரகாசத்தை அதிகரிக்கும். கருப்பு மிளகு பெரிய துண்டுகளாக நசுக்கி தேனுடன் கலந்து தெய்த்தால்  முகம் பளபளக்கும். மேலும், இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் தோல் பளபளப்பாகிறது. மிளகு அளவு குறைவாக இருக்க வேண்டும்.

எடையைக் குறைக்க உதவுகிறது

கருப்பு மிளகு நம் உடலில் இருக்கும் கொழுப்பையும் குறைக்கிறது. இது செரிமானத்தை நன்றாக வைத்திருக்கிறது. மேலும் குறுகிய காலத்தில் அதிக கலோரிகளை எரிக்கிறது. மிளகு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க..

மஞ்சளில் இந்த அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளது தெரியுமா உங்களுக்கு?

English Summary: BLACK PEPPER: Health benefits of black pepper.
Published on: 27 May 2021, 03:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now