மூக்கிரட்டை ஒரு கொடி இனத்தை சேர்ந்த செடியாகும். அதீத மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட மூக்கிரட்டை இன்னும் பலருக்கு தெரியாத கீரையாகவே இருக்கிறது. இந்தியாவில் புல் வெளி இடங்களில் தாராளமாக படர்ந்து வளரும் இவை எளிதில் கிடைக்கக்கூடியவை.
களைச் செடி
சாலை ஓரங்களில் படர்ந்து கிடக்கும் பல்வேறு செடிகளை தேவை அற்றது என அதனை பிடுங்கி எரிந்து விடுகிறோம். ஆனால் அதில் நிறைந்திருக்கும் நன்மைகள் நமக்கு தெரியாது. இவ்வாறு சாலைகளில் அதிகம் காணக்கிடைக்கும் மருத்துவ தன்மை கொண்ட செடிகளில் இந்த மூக்கிரட்டை செடியும் ஒன்று. இதனை களை செடி என விவசாயிகள் ஒதுக்குவதும் உண்டு. ஆனால் மனிதனின் ஆயுளை நீடித்து காயகற்ப மூலிகையாக விளங்குகிறது. இவ்வாறு எண்ணற்ற நன்மைகளைக் கொண்ட இந்த மூக்கிரட்டை செடியில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களையும் அதனை எவ்வாறு பயன் படுத்துவது என்றும் பார்ப்போம்.
கண் பிரச்சனைக்கு தீர்வு (The solution to the eye problem)
மூக்கிரட்டை செடியின் வேர்களை நன்கு காய வைத்து அரைத்து பொடி செய்துகொள்ள வேண்டும். பின்னர் அந்த பொடியை சிறிது இளம் சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் கண்கள் ரீதியான அனைத்து பிரச்சனைகள் தீரும் மட்டும் கண் பார்வை கூர்மையாகும்.
ரத்தம் தூய்மை (Purity of blood)
மூக்கிரட்டை கீரை மற்றும் வேர்களை சிறிது சிறிதாக வெட்டி பொடி செய்து நீரில் கலந்து குடித்து வர ரத்தத்தில் உள்ள நச்சு தன்மைகள் நீங்கி ரத்தம் தூய்மை அடையும்.
வலிகள் நீங்கும் (Remedy for Pain)
வயோதிகத்தால் ஏற்படும் கீல்வாதம் நோய்கள் உடலின் மூட்டு பகுதிகளிலும் அதை சார்ந்த தசை பகுதிகளையும் வலிமையடையச் செய்து, வலிகளை உண்டாக்குகிறது. இவ்வாறு இந்த நோயை சரி செய்ய மூக்கிரட்டையை நன்கு அரைத்து வலிகள் உள்ள இடங்களில் தேய்த்து வர வலிகள் நீங்கும் மற்றும் மூக்கிரட்டையை விளக்கெண்ணெயில் நன்கு வதக்கி ஒத்தடம் கொடுத்தாலும் வலிகள் நீங்கும்.
மோருடன் அரைத்த மூக்கிரட்டை கீரையை கலந்து குடித்து வந்தால் 90 நாட்களில் ரத்த சோகையை குணமாக்கும் அறிகுறிகளை உணருவீர்கள்.
பிற மருத்துவப் பயன்கள் (Other Medical benefits)
மூக்கிரட்டை செடியின் இலை, வேர், காய், கொடி ஆகிய அனைத்தையும் நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்துகொள்ள வேண்டும். இதனை மூக்கிரட்டை சமூலம் என்பர். நாள் தோறும் இருவேளை என தொடர்ந்து 50 நாட்களுக்கு இந்த சமூலத்தை 3 அல்லது 5 கிராம் அளவில் சாப்பிட்டு வர சுவாச நோய்கள் குணமாகும். மேலும் இந்த சமூலத்தை தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும் மற்றும் உடல் பொலிவையும், இளமையையும் நீடிக்கச் செய்யும்.
மூக்கிரட்டை வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொதிக்க வைத்த நீரை சாதாரண நீருடன் சேர்த்து குடித்து வந்தால் இரைப்பை நோய், பெரு வயிறு, நீர் கட்டு ஆகியவை குணமாகும்.
மூக்கிரட்டை கீரையின் வேரை அரைத்து, சிற்றாமணக்கு எண்ணெயில் காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து காலை வேலையில் குடித்து வர மலச்சிக்கல் நீங்கும். வேருடன் சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்பளர் நீரில் கொதிக்க வைத்து வடி கட்டி குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
K.Sakthipriya
Krishi Jagran