Boerhavia diffusa benefits and amazing soup recipe
மூக்கிரட்டை கீரை (Boerhavia diffusa) அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. சிறந்த டையூரிடிக் ஆக செயல்படுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்கலாம். மேலும் மூட்டுவலி மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை நன்மை பயக்கும், கல்லீரல் மற்றும் சிறுசீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டைக் கீரை விளங்குகிறது.
தேவையானவை:
மூக்கிரட்டைக் கீரை - 2 கையளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 1பல்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை விளக்கத்தைக் கீழே காணுங்கள்,
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும், மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 2 டம்பளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, வெங்காயம், தக்காளி, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். நன்றாகக் கொதித்த பிறகு, அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும். சூப்பரான மூக்கிரட்டைக் கீரை சூப் ரெடி. மூக்கிரட்டை கீரை கிடைக்காதவர்கள் மூக்கிரட்டைக் கீரைப் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க:
இயர்போன் பயன்படுத்தினால் மூளைக்கு ஆபத்து: எச்சரிக்கும் நரம்பியல் நிபுணர்கள்!
எப்போதாவது வரும் தும்மல் -எலும்பை உடைத்துவிடும் ஆபத்து உண்டு?