யோகா என்பது பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது, உடற்பயிற்சி, மன பயிற்சி, மூச்சு பயிற்சி என வகை படுத்தலாம். ஒவ்வொரு பயிற்சியும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து மன அமைதியினை தருகிறது. தொடர்ந்து யோகா செய்வதினால் பிணி இன்றி நீண்ட நாள் வாழ வகை செய்யும்.
பிராணாயாமம் (Pranayama)
பிராணாயமம் என்பதன் பொருள் பிராணன்+அயாமம் அதாவது (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்). மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாமமாகும்.
உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை நமது உடலில் இருந்து கொண்டு இருக்கும். முறையான மூச்சு பயிற்சியினை மேற்கொண்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவராசிகள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறது.
ஆயுளை அதிகரிக்கலாம் (Can increase longevity)
மனிதன் 1 நிமிடத்திற்கு 18 தடவை சுவாசிக்கின்றான். இதையே 9 முறை சுவாசித்தால் அவன் ஆயுட்காலம் இரட்டிப்பாகும். அதாவது மூச்சினை நன்றாக இழுத்து பின் மிகவும் மெதுவாக வெளியில் விட வேண்டும். இதனை படிப்படியாக குறைக்கும் போது உடல் இளமையாக இருக்கும்.
-
பிரணயாமாவின் மருத்துவப் பயன்கள் (Medicinal Benefits)
-
பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்று, குறைந்த அளவு நுரையீரலை அடைகிறது.
-
முறையான பயிற்சி மேற்கொள்வதால் நுரையீரல் முழுதும் பிராணவாயு கிடைக்கும்.
-
இதனால் மூளை புத்துணர்ச்சி பெறுவதோடு ஞாபக சக்தி அதிகமாகும்.
-
குறிப்பாக படிக்கும் மாணவர்கள் இதனை செய்வதினால் படிப்பாற்றல், புத்தி கூர்மை கூடும்.
-
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
செய்யும் முறை (Methods)
-
மூச்சு பயிற்சிக்கு உகந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளைகள் ஆகும்.
-
சமமான தரையில் துணி ஒன்றை விரித்து பத்மாசனத்தில் அமர வேண்டும்.
-
புல் தரை, திறந்த வெளி போன்றவை மூச்சு பயிற்சிக்கு ஏற்றதாகும்.
-
பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமயங்களில் செய்தல் கூடாது.
-
இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை.
-
வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை.
-
இடது மூக்குத் துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும். இதில் பல்வேறு நிலைகள் உள்ளன.
-
மூச்சு பயிற்சி தொடங்கும் முன்பு குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
-
இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலம் செய்யும் பொழுது நாடி சுத்தமடையும்.
-
சாத்விக உணவுகளை பழக்கமாக்க வேண்டும்.
-
துரித உணவுகள், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
-
Anitha Jegadeesan
Krishi Jagran