வாக்கிங் என்ற பெயரில், ஆமை வேகத்தில் நடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் மருத்துவப்படி வேகமான நடைபயிற்சியே, மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பது தெரியவந்துள்ளது. விறுவிறுப்பாய் வேக நடை போற்றால் மனதில் ஏற்படும் ஏமாற்றங்களின் தாக்கமும் குறைந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மனச்சோர்வு (Depression)
விறுவிறுப்பான நடைப்பயிற்சியின் எளிய செயல்பாடு பல சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன. அதேநேரத்தில் விறுவிறுப்பாக நடந்தால், ஆச்சர்யமூட்டும் நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.
நடை பயின்றால் போதுமா? அது துரிதமாய் இருந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நல்லது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மனநலக் குறைவு, குறைவாகவே ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜிம் வேண்டாம் (Do not gym)
இந்த நன்மைகளைப் பெற ஜிம்மிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, வேகமான நடைபயிற்சி கூட சிறந்த முடிவுகளைத் தருவதோடு பல வழிகளில் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். விறுவிறுப்பான நடைப்பயிற்சியின் (Brisk Walking) அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நன்மைகள் ஆச்சரியமளிக்கின்றன
இதயம் (Heart)
2018 ஆம் ஆண்டில் அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் 67 வது வருடாந்திர அறிவியல் அமர்வில் வழங்கப்பட்ட ஒரு ஆய்வில், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இதய செயலிழப்பு அபாயம் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.
விறுவிறுப்பான நடைபயிற்சி (ஒரு நேரத்தில் 40 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல்) மாதவிடாய் நின்ற பெண்களின் இதய செயலிழப்பு அபாயத்தை கணிசமாகக் குறைக்க உதவும்.
நிரிழிவு நோய் (Diabetes)
நீரிழிவு நோயாளிகளின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் காரணிகளை மெத்தனமாக்கும் கலை, பிரிஸ்க் வாக்கிங்கிற்கு இருக்கிறதாம்.
விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற வழக்கமான ஏரோபிக் உடற்பயிற்சிகள், டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு தமனி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆயுள் (Life)
ஒரு நாளைக்கு 20 நிமிட விறுவிறுப்பான நடைபயிற்சி, உங்கள் வாழ்க்கையில் பல வருடங்களை சேர்க்கலாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், ஒவ்வொரு நாளும் 20 நிமிட விறுவிறுப்பான நடைப்பயணம், 16-30 சதவிகிதம் வரை அகால மரணம் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவியதாக தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க...
கட்டிப்பிடி வைத்தியம்- உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப்பலன் தரும்!
வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?