Health & Lifestyle

Tuesday, 28 May 2019 02:16 PM

ப்ரோக்கோலி என்பது வெளிநாட்டு காய் ஆகும். இது கோஸ் வகையை சேர்ந்தது. இக்காயில் அதிகளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சமைத்து சாப்பிடுவதை விட நீரில் வேக வைத்து சாப்பிவதே சிறந்தது. காரணம் இதில் இரும்புசத்து, புரதம், கார்போஹைட்ரேட், குரோமியம், கால்சியம், மற்றும் வைட்டமின் "ஏ","சி","கே", பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இத்துடன் பைட்டோகெமிக்கல்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளதால், இது நம் உடலை வழுமையாக வைக்கவும் நோய் ஏற்படுவதில் இருந்தும் பாதுகாக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

உடலில் நோய் எதிர்ப்பு குறைப்பாட்டால் உடலில் மந்தம், அடிக்கடி மயக்கம், சோர்ந்து காணப்படுவீர்கள். ப்ரோக்கோலியில் உள்ள அதிக வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. அதனால் அடிக்கடி நோய்வாய் படுவதிலிருந்து காத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கண்களுக்கு  சிறந்தது

நீங்கள் கண் சார்ந்த பிரச்சனைகள்- கண்புரை மற்றும் தசை நொதித்தல் போன்றவற்றை எதிர்கொள்பவராக இருந்தால் ப்ரோக்கோலி சாப்பிடுவதை துவங்குங்கள். இதில் பீட்டா-கேத்ரின் போஷாக்கு அதிகம் உள்ளதால் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.

சரும பராமரிப்பு

சூரிய வெப்பத்திலிருந்து இருந்து வரும் "யூவி" கதிர் வீச்சால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், ப்ரோக்கோலி சிறந்த பாதுகாப்பு வளையமாக உள்ளது. இதில் உள்ள (Slforapen) உடல் சருமத்திற்கு சிறந்த முறையில் பாதுகாக்கிறது.

புற்றுநோயை கட்டு படுத்துகிறது

ப்ரோக்கோலியில் புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை உள்ளது. இந்த பயங்கரமான நோயிலிருந்து பாதுகாக்க தினமும் ப்ரோக்கோலி சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் புற்றுநோய் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமைகிறது.

உடல் எடை

உடல் பயிற்சி செய்த பின்பும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால்  ப்ரோக்கோலி சிறந்து விளங்குகிறது. இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தி தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.   

எலும்புகளை வலுவூட்டும்

ப்ரோக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால்  எலும்புகளை பலப்படுத்தி, மூட்டு வலிகளில் இருந்து தீர்வளிக்கிறது.

சர்க்கரை நோய்

ப்ரோக்கோலியில் உள்ள நார்சத்து இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் ப்ரோக்கோலியை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய்  படிப்படியாக குறையும்.    

K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)