சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும், வெண்ணெயில் ஸ்டார்ச் உள்ளிட்டவைக் கலப்படம் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாம் வாங்கும் வெண்ணெய் கலப்படம் செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிகமிக முக்கியம்.
வெண்ணெயின் நறுமணமும், சுவையும் மிக சாதரண உணவைக் கூட உடனடியாக உயர்த்தி விடும். வெண்ணெய், இந்திய சமையலறைகளில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காணப்படும் மிகவும் பொதுவான கிச்சன் மூலப்பொருள். ரொட்டி முதல் பராத்தா மற்றும் சூப்கள் வரை – ஒரு துளி வெண்ணெய் எண்ணற்ற வழிகளில் அனுபவிக்க முடியும்.
இருப்பினும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல உணவுப் பொருட்களைப் போலவே, வெண்ணெயில் கூட கலப்படம் செய்யப்படலாம்.
அதாவது மாவுச்சத்து எனும் ஸ்டார்ச் (Starch), வெண்ணெயில் காணப்படும் மிகவும் பொதுவான வகை கலப்படங்களில் ஒன்றாகும், இது அதிகளவில் உட்கொள்ளும் போது கடுமையான உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கும்.
உங்கள் வெண்ணெயில், கலப்படம் உள்ளதா என்பதை நாம் கண்டறிய ஏதுவாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெண்ணெயில் ஸ்டார்ச் கலப்படத்தைக் கண்டறிய எளிய சோதனையைப் பகிர்ந்துள்ளது.
பரிசோதிப்பது எப்படி?
-
ஒரு கண்ணாடி கிண்ணத்தில் சிறிது தண்ணீர்/எண்ணெய் எடுக்கவும்.
-
அதில் ½ தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும்.
-
கிண்ணத்தில் 2-3 சொட்டு அயோடின் கரைசலைச் சேர்க்கவும்.
-
வெண்ணெய் கலப்படமற்றதாக இருந்தால், கரைசலின் நிறம் மாறாது.
-
அதுவேக் கலப்படம் செய்யப்பட்ட வெண்ணெய்யாக இருந்தால், அந்தக் கரைசல், நீல நிறமாக மாறும்.
மேலும் படிக்க...
மூத்தக் குடிமக்களுக்கான சிறப்பு டெபாசிட் திட்டம் நீட்டிப்பு- SBI அறிவிப்பு!