Health & Lifestyle

Thursday, 28 April 2022 10:55 AM , by: Elavarse Sivakumar

உடலில் உள்ள சத்துக்கள் என வரும்போது, அது இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது. இருப்பினும் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதில் கால்சியத்தின் பங்கு சற்று அதிகமே. இன்றைய வாழ்க்கை முறையில், பெண்கள் செய்யும் சிலத் தவறுகளைச் சரியாகக் கவனித்துப் பற்றிக்கொள்கிறது கால்சியம் குறைபாடு.

உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான சத்துக்களில் ஒன்று கால்சியம். பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதிக்கும், ரத்தம் உறைவதற்கும், இதயத் தசைகள் சீராக சுருங்கி விரிவதற்கும், நரம்புகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும் கால்சியம் முக்கியமானது.

கால்சியம் குறைபாடு

பொதுவாக கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடாதது, சில வகை மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.

இந்தக் குறைபாடு, பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. ஏனெனில், பெண்களுக்குதான் கால்சியம் அதிகமாக தேவைப்படுகிறது.குறிப்பாக கிராமப் புறங்களில் வாழும் பெண்களிடையே, கால்சியம் குறைபாடு அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது.இதனால் உடல் சோர்வு, எலும்புகள் வலுவிழத்தல் மற்றும் உடைதல், தசைப்பிடிப்பு, சருமம் மற்றும் நகங்கள் பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகள், பற்கள் பாதிப்பு, மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன.

தடுக்க (To prevent)

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், காய்கறிகள், கீரை வகைகள், முழு தானியங்கள், முளைவிட்ட தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், கால்சியம் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் போன்றவர்களுக்கு, சராசரி தேவையை விட அதிகமாக கால்சியம் தேவைப்படும். எனவே இதனைக் கவனத்தில் வைத்துக்கொண்டு, கால்சியம் அதிகம் தரக்கூடிய உணவுகளைத் தவறாமல், அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வோம்.

மேலும் படிக்க...

மனஅழுத்தத்தைக் குறைத்து, ஆயுளை அதிகரிக்கும் Brisk Walk!

உடல் பருமனைக் குறைக்க உதவும் மாம்பழம்- இத்தனை நன்மைகளா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)