பெண்கள் மது அருந்துவதால், மார்பக புற்றுநோய் வரும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச அளவில் 100 ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதில், 55 ஆராய்ச்சி முடிவுகள், மார்பக கேன்சருக்கும், மதுப்பழக்கத்திற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக கூறுகிறது. தொடர்ச்சியான மதுப்பழக்கத்தால் மார்பக கேன்சர் வருகிறது.
மதுப் பழக்கம் (Drinks)
ஆல்கஹாலில் உள்ள 'அசட்டால்டிஹைடு' ஜீரண மண்டலத்தில் சென்று இரத்தத்துடன் கலந்து, மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி, உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் தன்மையை குறைக்கிறது. ஏற்கனவே இருந்த மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டால் வராது தானே என்றால், மதுவை நிறுத்தி ஐந்து ஆண்டுகள் கழித்தே பாதிப்புகள் குறையும். பழக்கத்தை விட்டு, 16 ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் 'ரிஸ்க்' அதிகமாகவே உள்ளது.
சில வகை மதுபானங்கள் உடலுக்கு நல்லது என்ற தவறான பிரசாரம் உள்ளது. மதுவில் எந்த வகை, எவ்வளவு குடிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. எந்த அளவும், எல்லா வகையும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மதுப்பழக்கத்தை உடனடியாக கைவிடுவதே நல்லது. அதுவே, உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். தவறானப் பாதையில் செல்வதைத் தவிர்த்து, நல்வழியில் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க