
கொரோனா வைரசின் பாதிப்பு தீவிரமாகி, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றவர்களுக்கும், 50 வயதை கடந்தவர்களுக்கும் நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. இவர்களில், பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான மற்றும் மிதமான அறிகுறிகள் மட்டுமே உள்ளன.
இந்த வைரஸ் மூளையில் (Brain) நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிமோனியா பாதிப்பு, ஆக்சிஜன் அளவு (Oxygen Range) குறைவதன் மூலம் நுரையீரலில் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தும். மூளை செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமானது ஆக்சிஜன். ரத்த அழுத்தத்த்தை குறைத்து, இதயத்தை பலவீனப்படுத்தும்.
சுவாச மண்டலம்
கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தை பாதிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், இந்த வைரஸ் நரம்பு மண்டலத்திற்குள் ரத்தத்தின் மூலமாகவோ அல்லது வாசனை உணர்வு நரம்புகள் மூலமாகவோ நேரடியாக மூளைக்குள் நுழையலாம். வைரஸ் மூளைக்குள் நுழைந்தவுடன், மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் தொற்று நோய்களுக்கு எதிராக போராடும் நோய் எதிர்ப்பு செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இரு டோஸ் தடுப்பூசி செலுத்தினால் உயிரிழப்பு குறைகிறது: ஆய்வில் தகவல்!
வைரசை அழிப்பதற்கு போராடும் நோய் எதிர்ப்பணுக்கள், அதிக அளவில் ரசாயனங்களை உற்பத்தி செய்யும். இதற்கு, ''சைட்டோகைய்ன் ஸ்டார்ம்' என்று பெயர். இந்த ரசாயனங்கள் உடல் உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி, மூளை வீக்கம், வலிப்பு நோய், மயக்கம், குழப்பம் வாசனை, சுவையின்மை, தலை வலி, தசை வலி, பலவீனம் ஆகியவற்றை ஏற்படுத்தி, நரம்பியல் பிரச்னையை உருவாக்கி விடுகின்றன.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த சில நாட்கள், வாரங்களில் இவை ஏற்படலாம். நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு முறையாக சிகிச்சை செய்தால், இரண்டு - நான்கு வாரங்களில் சரியாகலாம். சிலருக்கு, சில மாதங்கள் வரை தொடர்ந்து நீடிக்கலாம் என்று மருத்துவர் சிவன் கேசவன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் சிவன் கேசவன்,
குழந்தை நரம்பியல் மருத்துவ ஆலோசகர்,
டாக்டர் மேதா மருத்துவமனை குழுமம்,
சென்னை