உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி மிக மிக அவசியம். அத்தகைய உடற்பயிற்சியைச் செய்வதால் ஏற்படும் பலன்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டால், உடல் பல்வேறு சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். உடல் எடை எக்குத்தப்பாகக்கூடிவிடும். மிகவும் குண்டாவதுடன், பல நோய்களும் வந்துவிடும் என்றெல்லாம் நமக்குள் பரவும் வதந்திகள் ஏராளம். அதுமட்டுமல்ல, இந்த நேரத்தில்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பாதிப்பு நமக்குதான் என்பன போன்ற வதந்திகளும் இருக்கத்தான் செய்கின்றன.
முடிந்தவரை நல்ல பயிற்சியாளரிடம் உடற்பயிற்சிகளை கற்றறிந்து பிறகு நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. இன்றைய காலகட்டத்தில் இரவுப் பணி செல்பவர்கள்தான் அதிகம்? அதிலும் shift மாறி மாறி வருபவர்களுக்கு எந்த மாதிரியான நேரத்தில் உடற்பயிற்சி கூடத்துக்கு வரலாம்?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜிம் டிரைனர். இரவு நேரப் பணி என்றால் அவர்களின் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்.
மனித உடம்பு அதன் லைஃப் ஸ்டைலுடன் ஒத்துப்போக அல்லது கிரகித்துக் கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் என்று பார்த்தால் 7 நாள்கள் முதல் 21 நாள்கள் வரைதான்.
ஆனால், இந்த நாள்களுக்குள் இரவு நேரப் பணி செய்பவர்கள் அடிக்கடி ஷிப்ட் மாறி மாறிச் சென்றிருப்பார்கள்.ஒரு வாரத்துக்கு இரவு நேர ஷிப்டில் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால், காலை நேரத்தில் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூக்க வேண்டியதுக் கட்டாயம்.
உறக்கம் கலைந்து விழித்ததும் அன்றைய பணிகளை முடித்துவிட்டு உங்கள் இரவு நேரப் பணிக்கு செல்ல ஆயத்தமாவதற்கு 3 மணி நேரம் முன்பு ஜிம்முக்குச் சென்று 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யலாம். அதன் பிறகு, வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்குச் செல்லலாம்.
அதாவது அப்போது நீங்கள் சாப்பிடுவதுதான் break fast. Break fast என்றால் சாப்பிடாமல் 7 மணி நேரம் இருக்கிறீர்கள் அல்லவா. அதன் பிறகு உங்கள் விரதத்தை (fast) முறிப்பதுதான் ஆங்கிலத்தில் break fast என்று கூறுவார்கள்.இப்படி உங்கள் வேலை நேரத்துக்கு ஏற்றாற்போல் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
7 மணி நேரம் நன்கு தூங்குங்கள். ஜிம் செல்ல முடியாத சூழல் இருந்தால் வீட்டிலேயே தெரிந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
முடிந்தவரை நல்ல பயிற்சியாளரிடம் உடற்பயிற்சிகளை கற்றறிந்து பிறகு நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.
எது எப்படியோ உங்கள் உடலுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அதில் மட்டுமே எந்தச் சமரசமும் செய்து கொள்ள வேண்டாம்.
மேலும் படிக்க...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.15,000 மானியம்!
தரித்திரம் தொற்றிக்கொள்ளும் செடிகள்- இவற்றை வளர்க்க வேண்டாம்!