அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் முக்கியமானது அன்னாசி பழம் (Pineapple ). அதிலும் குறிப்பாக கோடைக் காலங்களில், அண்ணாசி பழச்சாறு சாப்பிடாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு, வாடிக்கையாளர்களின் உள்ளத்தைக் கவர்ந்த பழம் என்றால் அது அன்னாசிதான்.
இந்த அன்னாசி, ஒயின்ஸ் (wine)எனப்படும் பழச்சாறு தயாரிப்பிலும் இடம்பெறுகிறது. இது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் பல வகைகளிலும், சிவப்பு கம்பளம் விரித்துத் தருகிறது அன்னாசி.
அவை என்ன எனத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா? இதோ அந்தப் பட்டியல்!
1. பல்வேறு மருத்துவப்பயன்களை தன்னகத்தேக் கொண்டுள்ளது அன்னாசி.
2. கால்சியம், சோடியம், மெக்னீஷியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதன் காரணமாக, மக்களைக் கவரும் ஜெல்லி, ஜாம் உள்ளிட்டவை அன்னாசியில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
3. செரிமாணத்தை சீராக்கும் (digestion)
சாப்பிடும் உணவு சீக்கிரமாக செரிமானம் ஆகத் துணை நிற்கிறது அன்னாசி பழம். இதில் உள்ள bromhexine ஜீரணத்தைத் தூண்டிவிடுகிறது. எனவே தினமும் சாப்பாட்டிற்கு பிறகு 2 அல்லது 3 துண்டுகள் அன்னாசியை எடுத்துக்கொள்வது நல்லது.
4.சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் (kidney disease)
அன்னாசிப் பழத்தைத் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகக் கோளாறுகள் படிப்டியாக அகல்கிறது. ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியம் சத்து, சிறுநீரகக் கோளாறுகளை துவம்சம் செய்கிறது.
5. அன்னாசியில் உள்ள வைட்டமின் C புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமையில் இருந்து, புகைப்பிடிப்பவரை 50 சதவீதம் வரைப் பாதுகாக்கிறது.
6.இதய ஆரோக்கியம் (Health for heart )
இதய நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவுகிறது அன்னாசி. அத்துடன், சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறவும் அருமருந்தாகத் திகழ்கிறது.
7. உடல் சோர்வைப் போக்கும் (Fatigue)
உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் என்பதால், திருமண விருந்துகளில், அன்னாசிப்பழத்தைக் கட்டாயம் சேர்ப்பது கேரளாவில் வாடிக்கை. இதேபோல் வட மாநிலங்களில் நம் அனைவருக்கும் பிடித்த பிரியாணியில்கூட அன்னாசியை நறுமணத்திற்காக சேர்ப்பது வழக்கம்.
மேலும் படிக்க...
சுரைக்காய் ஜூஸை அதிகமாகப் பருகினால் மரணமும் நிகழலாம்-எச்சரிக்கை!
Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!
Amla benefits: குளிர்கால சிக்கல்களிலிருந்து உங்களை காக்கும் "நெல்லிக்கனி"- இயற்கையின் வரப்பிரசாதம்!!