இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 May, 2022 7:33 PM IST
Rat Harassment

எலி தொல்லையால் நிறைய பேருக்கு நோய்கள் வந்துள்ளது. அப்படி இருக்கும் எலிகளை நம் வீட்டில் உள்ள இயற்கைப் பொருட்களை கொண்டே விரட்ட முடியும். 

நாம் என்னென்ன மருந்துகள், எலி பொறி, பிஸ்கெட் போன்றவற்றை வாங்கி வைத்தாலும் அந்த எலி எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தால் கூட அதற்கு புத்திசாலித்தனம் அதிகம். உணவுப் பொருட்களை சாப்பிடுவது எலக்ட்ரிக் கேபிள் போன்ற அனைத்தையும் விடாமல் கடித்து விடும்.

குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவர்களின் விளையாட்டு பொருட்களில் எலிகள் வாயை வைக்கும் போது அவற்றின் மூலம் பரவும் பாக்டீரியாக்கள் குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இயற்கையான பொருட்களை வைத்து நாம் எலியை விரட்டி விடலாம். அதை என்னென்ன என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எலியை விரட்ட டிப்ஸ் (Tips to repel rats)

  • எலிகளுக்கு புதினா போன்ற நறுமணம் வரக்கூடிய வாசனை என்றால் பிடிக்கவே பிடிக்காது. இனி எலி இருக்கும் இடங்களில் ஒரு சிறிய பஞ்சில் புதினா எண்ணெயை நனைத்து ஆங்காங்கே வைத்துவிட்டால், ஓரிரு நாட்களில் எலி அந்த வாசனை பிடிக்காமல் ஓடிவிடும்.
  • உருளைக்கிழங்கு பொடியை வீட்டின் மூலை முடுக்குகளில் தூவி விடுங்கள். அதை விரும்பி சாப்பிட்டுவிட்டு எலி வயிறு வீங்கி இறந்துவிடும்.
  • வெங்காயம் எப்போதும் ஒரு நெடிய மனம் தரக்கூடியது. எனவே எலி வரும் இடங்களில் இதை வைத்துவிட்டால் நெடி மணத்துக்கு அது ஓடிவிடும்.
  • எலி அடிக்கடி நடமாடும் இடங்களில் கோகோ பவுடரை கலந்து போட்டு விடுங்கள். இது தாகத்தை ஏற்படுத்தி தண்ணீர் குடித்தவுடன் இறக்க வைத்து விடும்.
  • அடுத்தது எலியை விரட்ட மூலைமுடுக்குகளில் மிளகு பொடியை தூவி வைத்தால் போதும். அது நெடி தாங்கமுடியாமல் ஓடிவிடும்.
  • பூண்டை உரித்து லேசாக நசுக்கி தண்ணீரில் போட்டு எலி வரும் பாதையில் வையுங்கள். பூண்டின் வாசனை பிடிக்காமல் எலி ஓடி விடும்.
  • எலிக்கு கிராம்பு வாசனை என்றாலே பிடிக்காது. எனவே எலி வரும் இடத்தில் ஒரு துணியில் கிராம்பு எண்ணெய் ஊற்றி போட்டுவிடுங்கள். எலி ஓடிவிடும்.
  • விளக்கெண்ணெய்யின் பிசுபிசுப்பு தன்மை மற்றும் வாசனை எரிச்சலைக் கொடுக்கும். இதை கண்டு எலி ஓட ஆரம்பித்துவிடும். எனவே எலி வருகிற இடத்தில் சில சொட்டு விளக்கெண்ணெய்யை ஊற்றினால் எலி வராது.
  • எலி வராமல் இருக்க சில விஷயங்களையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். உணவுப் பொருட்களை வெளியில் வைக்காமல் இருக்க வேண்டும்.
  • எலிகளின் எச்சங்களை உடனே சுத்தம் செய்ய வேண்டும். இது மற்ற பூச்சிகளை ஈர்க்க கூடும்.
  • எலிக்கு இருண்ட, மங்கலான, குப்பைகள் இருக்கும் இடங்கள் என்றால் பிடிக்கும். எனவே வீட்டை எப்பொழுதும் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைத்திருங்கள்.
  • வீட்டின் ஜன்னல்களை அடைத்து வைத்தால் ஈ, கொசுத்தொல்லை, எலித்தொல்லை இல்லாமல் இருக்கும்.

மேலும் படிக்க

சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன

பற்களில் மஞ்சள் கறையா? போக்குவதற்கு இதைச் செய்யுங்கள்!

English Summary: Can't bear the harassment of rat? Rat will not come if you do this!
Published on: 21 May 2022, 09:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now