பருவத்தில், ஊட்டச்சத்து மிகுந்த உணவு, உடற்பயிற்சி உட்பட சில ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்க தவறியதன் விளைவு அல்லது வேறு பல காரணங்களாலும், 30 வயதிற்கு மேல் மெதுவாக ஒவ்வொரு உடல் பிரச்னையாக வர ஆரம்பிக்கும். இதை கவனித்து, நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், அதன் விளைவுகளை, 60 வயதிற்கு மேல், முதுமையில் அனுபவிக்க வேண்டியிருக்கும். அதனால், 60 வயதிற்கு மேல், அறிகுறிகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. தேவைக்கு ஏற்ப, குறிப்பிட்ட இடைவெளியில், முழு உடல் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
அறிகுறிகள் (Symptoms)
சில சமயங்களில் நோயை விடவும், நோயின் ஆரம்ப அறிகுறிகளே தொந்தரவாக இருக்கும். கை, கால்களில் ஏற்படும் எரிச்சல், நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். முகம், கால்களில் ஏற்படும் வீக்கம், உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கும்.
ஆண்டுதோறும் எல்லா பரிசோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. முதன் முறை அனைத்து பரிசோதனைகளையும் செய்து விட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் என்ன தேவையோ அதை மட்டும் டாக்டரின் ஆலோசனைப்படி செய்யலாம்.
நோய்த் தொற்று (Infection)
முதுமையில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு திறன் குறைந்து, நோய் தொற்று பாதிக்கும். இதில், நிமோனியா பாதிப்பு தான் முதலில் உள்ளது. இதயம், சிறுநீரகங்கள் உட்பட உடல் பிரச்னைகள் வரும் போது, பல நேரங்களில் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போவதற்கான காரணம், நிமோனியாவாக உள்ளது.
எந்தப் பக்க விளைவும் இல்லாத நிமோனியாவிற்கு தடுப்பூசி உள்ளது; இதை, ஒரு முறை போட்டுக் கொண்டால் போதும்.
டாக்டர் வி.எஸ்.நடராஜன்,
முதியோர் நல சிறப்பு மருத்துவர், சென்னை.
dr_v_s_natarajan@gmail.com
மேலும் படிக்க
வறுத்த பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
பொடுகுத் தொல்லை நீங்க பீட்ரூட்டை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?