பாரம்பரியமான முறையில் சின்ன வெங்காயம், நல்லெண்ணை மற்றும் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை பயன்படுத்தி செய்வதால், இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தேவையான பொருள்கள் :
- நல்லெண்ணெய்-2 மேசைக்கரண்டி
- சின்ன வெங்காயம் -1 1/2 கப் நறுக்கியது
- பச்சைமிளகாய்-2
- கறிவேப்பில்லை-சிறிய அளவு
- இஞ்சிபூண்டு விழுது-2 தேக்கரண்டி
- தக்காளி-2
- நறுக்கிய கொத்தமல்லி-சிறிதளவு
- கோழிக்கறி-1 கிலோ
- அரைத்த செட்டிநாடு மசாலா
செட்டிநாடு மசாலா அரைக்க தேவையான பொருள்கள் :
- பட்டை-1
- ஏலக்காய்-3
- கிராம்பு-5
- அன்னாசி பூ -1
- முழுமிளகு-2 தேக்கரரேண்டி
- முழு தனியா விதை -2 தேக்கரண்டி
- சீரகம் -1 தேக்கரண்டி
- சோம்பு -1 தேக்கரண்டி
- கசகசா -1 தேக்கரண்டி
- காய்தமிளகாய் -8
- துருவிய தேங்காய் 1/2 கப்
- முந்திரிப்பருப்பு -5
செட்டிநாடு மசாலா செய்முறை:
மேல குறிப்பிடப்பட்டுள்ள அணைத்து பொருட்களையும் ஒரு கடாயில் எண்ணையின்றி மென்மையான சூட்டில் வருத்து ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும்.
செட்டிநாடு சிக்கன் குழம்பு செய்முறை:
ஒரு அகலமான வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பில்லை மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம், சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கிய பின்னர் தக்காளி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் அதில் கோழிக்கறி சேர்த்து வதக்கவும். பின் அரைத்த செட்டிநாடு மசாலாவை சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் திரியும் வரை நன்கு வேக வைக்கவும் 20 நிமிடத்தில் சுவையான காரைக்குடி செட்டிநாடு சிக்கன் குழம்பு தயார். நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி மற்றும் பொரட்டாவுடன் பரிமாறலாம்.
செட்டிநாடு உணவு வகைகள் மற்றும் பயன்படுத்தும் பொருட்களின் குறிப்பு:
செட்டிநாட்டு உணவு வகைகளில் சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் உள்ளன. இடியாப்பம், பணியாரம், வெள்ளை பணியாரம், கருப்பட்டி பணியாரம், பால் பணியாரம், குழி பணியாரம், கொழுக்கட்டை, மசாலா பணியாரம், அடிகூழ், கந்தரப்பம், சீயம், மசாலா சீயம், கவுணி அரிசி, மாவத்தூள் அரிசி போன்ற பிரபலமான சைவ உணவுகள் சில. செட்டிநாட்டு உணவில், முக்கிய மசாலாப் பொருட்களில் அனாசிப்பூ , கல்பாசி , புளி, மிளகாய், சோம்பு , பட்டை , லவங்கம், கருமிளகு, ஜீரகம், வெந்தயம் ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க: