கொரோனாத் தொற்றுப்பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா கோரத்தாண்டவம் (Corona Coronation)
தமிழகம் முழுவதும் கொடூரக் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த ஆழிப்பேரலை, குழந்தைகள், மாணவர்கள், மூத்தக் குடிமக்கள் என எவ்வித வித்தியாசமும் பார்க்காமல், அனைத்துத் தரப்பினரையும் காவு வாங்கி வருகிறது.
முழுஊரடங்கு (Full curfew)
இதனைத் தடுக்க ஏதுவாக கடந்த மே 24ம் தேதி முதல் தளர்வில்லா முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசி உள்ளார்.
சங்கிலியை உடைக்க வேண்டும் (To break the chain)
அதில் அவர் கூறியதாவது:-
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். கடந்த 24-ந்தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பரவல் குறைந்தது (The spread is low)
முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.சென்னையில் 7 ஆயிரம் வரை எட்டிய பாதிப்பு, இப்போது 2 ஆயிரமாக குறைந்து விட்டது. இன்னும் ஒருசில நாட்களில் முழுமையாகக் குறைந்து விடும்.
எனவே, கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து தந்துள்ளது. இருந்தாலும் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு (Oxygen deficiency)
ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற சூழல் இல்லவே இல்லை. நிறைய மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன என்பதுதான் உண்மை.மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும் என்று சொல்வார்கள். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும் அரசாக செயல்படுகிறது.
கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவும் (Follow the rules)
அதனால் அரசின் கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சிலர் மீறினாலும் அதனால் முழுப்பயன் கிடைக்காமல் போய்விடும்.
நிகழ்காலச் சோகங்களில் இருந்து மீண்டு எதிர்காலப் புத்துணர்வை தமிழக மக்கள் அனைவரும் பெற்றாக வேண்டும்.இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
ரேஷன் பொருட்களை பெற இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடக்கம்!!
கொரோனா வைரஸ்ஸை ஒழிக்கும் கத்திரிக்காய் சொட்டு மருந்து- ஆந்திர அரசு அனுமதி!
8 ஆசிய சிங்கங்களுக்கும் கொரோனா- தனி கூண்டில் தனிமைப்படுத்தப்பட்டன!